பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லியைப் போலவே பாரதியும் மனித குலத்தின் சிறுமையைக் கண்டு மனம் புழுங்கியவன்; அதே சமயம் மானிடத்தின் பெருமையையும் பேராற்றலையும் உணர்ந்து போற்றியவன். இதனைப் பாரதியின் பல படைப்புக்களிலும் நாம் காணலாம். மனிதர்களின் இழிதன்மையைக் குறித்து 'ராணி மாபில் அந்தத் தேவதை பேசியதைப் போலவே, பாரதியின் “ஞான ரத' த்திலும் பர்வத குமாரி பின்வருமாறு பேசுகிறாள்: “ “ மானுடா, உங்கள் உலகத்திலே வாழ்வோர் சோற்றுக்கும் ஆடைக்குடமாகப் பொய் பேசு கிறார்கள்; வஞ்சனை செய்கிறார்கள்; நடிக்கிறார்கள்; ஏமாற்று கிறார்கள்'; திருடுகிறார்கள்; ஹிம்ளைகள் செய்கிறார்கள்; கொலை புரிகிறார்கள்; உடலை விற்கிறார்கள்; அறிவை விற்கிறார்கள்; அடிமைகளாகி ஆத்மாவை விற்கிறார்கள். மானுடா. உங்கள் உலகத்திலே ஏழைகளாயிருப்போர் பெரும்பாலும் மான மற்ற அடிமைகள். அவர்கள் அற்ப சுகத்தின் பொருட்டு எது வேண்டுமாயினும் செய்வார்கள், செல்வராயிருப்போரில் பெரும்பாலோர் திருடர் க ள். உங்கள் உலகத்திலே எளியோராயிருப்போர் வெறுத்தற்குரிய நீச குணமுடையோர். வலியோராயிருப்போர் கா லால் மிதித்து நசுக்குதற்குரிய தீக்குணமுடையோர். அவர் களெல்லாம் செய்ததைத் திருப்பிச் செய்யாமல் வேறென்ன செய்கிறார்கள்? உண்டும் உறங்கியும் நடித்தும் சாகிறார்கள், {ஞானரதம்-கந்தர்வ லோகம்). கிட்டத்தட்ட ஷெல்லியின் 'ராணி மாபின் குரலை எதிரொலிப்பதுபோலவே இங்கு பர்வதகுமாரி பேசுகிறாள். அதே சமயம் அவள் மனிதகுலத்தின் பெருமையையும் சுட்டிக்காட்டத் தவறவில்லை: 1' மானுட ஜன்மம் எவ்வளவு இழிவுகளுடையதாயினும் ஒரு முக்கியமான விஷயத்திலே எங்கள் பிறப்பைக் காட்டிலும் சிறந்தது . ஆத்மத் தேட்டத்திற்கு மனிதப் பிறவி மிகவும் சௌகரியமானதாக அமைக்கப்பட்டிருக்கின்றது. 'திருப்தி எதிலும் ஏற்படடா திருத்தல் --இந்த ஒரு குணமே . மனிதப் பிறவிக்குக் காப்பாகவும், அதன் பெருஞ் சிறப்பாகவும் விளங்கு கின்றது" (அதே பகுதி). . 776