பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சூரலோ காதலைப்போலவே ஒலித்தது. அந்தக் குரல் அந்தப் புதுமையான அதிசயப் பிறவியின்பால் எல்லா ஜீவ ராசிகளை யுமே ஈர்த்துக்கொண்டது" (பாடல் 5): {A lovely lady garmented in light - From her beauty-deep her eyes, 2s are Two openings of unfathomable night Seern through a Temple's cloven roof-ther hair Dark-the dirm, brain whirls dizzy with delight, Picturing her form; fyer soft smiles shone afar And her low voice was heard like love, and drew AI! living things towards this wonder new). ஷெல்லியின் காதல் அழகும், அழகுக் காதலும் உச்ச நிலை பெறுவது அவனது 'எபிசைக்கிடியான்' என்ற கவிதையில் தான். இந்தக் கவிதை பிறந்த 'கதையை முன்னமேயே பார்த்தோம். இந்தக் கவிதையில் வரும் எமிலியா அதே பெயருள்ள மானிடக் கன்னிதான் ; இத் தாலிய நாட்டு ' இளங்கைதான். ஆனால் அவனுக்கோ அவள் வெறும் மண்ணுலகத்து அழகியாக மட்டும் தோன்ற வில்லை; அவனது செளந்தர்ய லட்சியத்தின் வடிவமாகவும் அவள் தோன்றுகிறாள். அவன் தன் இளமைக் காலம் தொட்டே தனது பெண்மையின் அழகு லட்சியத்தைத் தேடியலைந்ததாகவும், இறுதியில் அந்த லட்சியம் தோற்றிய தாகவும், அதுவே எமிலியாகக் காட்சி தருவதாகவும் கூறு இனன். அவளைப் பற்றி அவன் பின்வருமாறு வருணிக்கிறான்: “சொர்க்கலோகத்துத் தேவ கன்னியே! மானிடத் தன்மைக் கும் உயர்வானவளே! உன்னில் தாங்கி நிற்காத அளவுக்கு ஒளி, காதல், அமரத்துவம் எல்லாவற்றையும் பெண் என்ற அந்தப் பிரகாச வடிவத்துக்குப் பின்னே திரையிட்டு மறைத் திருப்பவளே! சாஸ்வதமான சாபத்தில் தோற்றும் இனிய கிருபா கடாட்சமே! இந்த விளக்கற்ற பிரபஞ்சத்தின் திரை விட்டு மூடிய மகோன்னதமே!மேகங்களுக்கப்பால் தோன்றும் சந்திர வடிவம் நீ! இறந்தவர்களுக்கு மத்தியில் தோற்றும் ஜீவ வடிவம் நீ! புயலுக்கு மேலாகத் தோற்றும் தாரகை நீ! 193