பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/222

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
  • <நொய்ந்த வீடு, நொய்ந்த கதவு, நொய்ந்த கூரை

நொந்த கரம், நொய்ந்த உடல், நொய்த்த உயிர், நொய்ந்த உள்ளம்-இவற்றைக் காற்றுத் தேவன் உடைத்து நொறுக்கி விடுவான். சொன்னாலும் கேட்கமாட்டான். ஆதலால், மானிடரே, வாருங்கள், வீடுகளை திண்மையுறக் கட்டுவோம். கதவுகளை வலிமையுறச் சேர்ப்போம், "உடலை உறுதிகொள்ளப் பழகுவோம். உயிரை வலிமையுற நிறுத்துவோம். உள்ளத்தை உறுதி செய்வோம். இங்ஙனம் செய்தால் காற்று நமக்குத் தோழனாகி விடுவான்.” ' ஷெல்லியோ நொந்து சலித்த மனத்தின் காரணமாக- காற்றின் கைப்பாவையாக மாறிப் பறக்க. எண்ணுகிறான்; த னது வலிமையிழந்த எண்ணங்களை வாரிச் செல்லுமாறு வேண்டுகோள் விடுக்கிறான்; தன்னையே வீணையாக்கி இசை யெழுப்ப வேண்டுகிறான். ஆனால் பாரதியோ காற்றிடம் இந்தத் தயவு எதையும் நாடவில்லை. நம்மை நாமே வலிமைப் படுத்திக் கொண்டால், காற்றுத் தேவன் தானாகவே நமக்குத் தோழனாகி விடுவான் என்று உறுதி கூறுகிறான். அந்தத் தன்னம்பிக்கையும் உறுதியும் அவனுக்கிருக்கிறது. பாரதியின் இந்த உறுதி அவனது வேறொரு பாட்டிலும் பிரதி பவிக்கிறது. நிலாவும், வான் மீனும், காற்றும்” என்ற பாட்டில் அவன் பின்வருமாறு பாடுகிறான் : பன்றியைப் போலிங்கு மண்ணிடைச் சேற்றில் படுத்துப் புரளாதே வென்றியை நாடியில் வானத்தில் ஓட்' விரும்பி விரைந்திடுமே; முன்றிலில் ஓடுமோர் வண்டியைப் போலன்று : மூன்றுல்கும் சூழ்ந்தே நன்று திரியும் விமானத்தைப் போலொரு நல்ல மனம் படைத்தோம்.

(பாட்டு-3)