பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிடையாது. குருவிக்கு உணவுண்டு ; உழைப்புண்டு: நாயக னில்லை; சேவகனில்லை. புதுச்சேரியில் அஞ்ஞாத வாசத்திலே அடைபட்டு, வறுமை வாழ்வை மேற்கொண்டிருந்த பாரதிக்கு இத்தகைய எண்ணங்கள் தோன்றுவதில் வியப்பில்லை. பொய்யும் சூதும் இல்லாத, பேதா பேதம் இல்லாத, அடிமைத்தனம் இல்லாத குருவியின்" சுதந்திர வாழ்வு மனிதனுடையதைக் காட்டிலும் மேம்பட்டதாகத்தான் பாரதிக்கும் தோன்றுகிறது. எனினும் ஷெல்லி கவிஞனையும் மிஞ்சும் கவிதாசக்தி படைத்ததாக வானம்பாடியை விளித்து, அதனிடம் ஆனந்தப் பிச்சை கேட்கிறானே, அந்த மாதிரி பாரதி கேட்க முனையவில்லை. குருவிக்குள்ள சுதந்திரத்தை மனிதன் தனக்கும் உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை தளராதவனாக இருக் கிறான் பாரதி, மேலும் அதே சமயம், குருவியைக் காட்டி லும் மனிதன் சில விதங்களில் மேம்பட்டவன் என்பதையும் உணர்ந்து அதனைப் பின்வருமாறு வெளியிடுகிறான்: தெய்வமே, எனக்கு இவ்விதமான வாழ்க்கை தரலா காதா? குருவிக்கில்லாத பெருமைகள் எனக்கும் சில அருள் செய்திருக்கிறாய் என்பது மெய்தான், ஆராய்ச்சி, பக்தி, சங்கீதம், கவிதை முதலிய இன்பங்கள் மனிதனுக்குக் கைகூடும். குருவிக்கு இயல்பில்லை. ஆனாலும் இந்த இரண்டுவித இயல்பும் கலந்து பெற்றால், நான் பரிபூரண - இன்பத்தை அடைந்து விடமாட்டேனா?” இங்கு பாரதி ஒரு தெளிந்த கருத்தைப் பிரதிபலித்து, ஷெல்லியிலும் மேம்பட்டவனாகக் காட்சி தருகிறான். குருவி யின் சுதந்திர வாழ்க்கையோடு, மனிதனின் சிறப்புக் களும் இணைந்து புதிய வாழ்க்கை மலர்ந்தால், அந்த வாழ்க்கை சுதந்திரமானதாகவும் ஆனந்தமானதாகவும் நிச் சயம் இருக்கும் என்று முடிவுகட்டி விடுகிறான். இதன் பின் குருவி 'விடு விடு' என்று கத்துவதாகச் சொல்லி அந்த வார்த்தையிலிருந்து விடுதலை பற்றிய தத்துவ விசாரத்தில் இறங்கி, மனிதன் விடுதலை பெற்று நல்வாழ்வு வாழ முடியும் என்ற தன்னம்பிக்கையை ஊட்டும் விதத்தில் தனது குறைக் , 23!