பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொடி! பனிவாடையை4ே3 போர்த்திக் கொள்பவர்களே, உங்களைத்தான்! கதகதப்பான வீடுகளைக் கட்டுபவர்களே!... நீங்களெல்லாம் அவர்களைத் தொட்டில் ஆதல் சுடுகாடு மட்டும் பேணிப் பாதுகாக்கின்றீர்கள்! தம்மிடமுள்ள எல்லா வற்றையும் அவர்களுக்கு வழங்கிவிடும் கடவுளர்களைப் போல் இருக்கின்றீர்கள்!...........: (People of England, ye who toil and groan, Who reap the harvests which are not your Wil, Who weave clothes which your cppressors wear And for your own take the inclement air; Who build warrm houses ... And are like gods who give them all they have, And £111Tse them from cradle totic grave... இரும்பைக் காட்டி வருமாறு பாகன் தனது மேற்கண்ட கவிதைத் துணுக்கும் பாரதியின் படைப்பில் எதிரொலித்துள்ளது எனலாம். பாரதி கடவுள் நம்பிக்கை யுள்ளவவன்; அந்தக் கடவுளை உண்மையிலும் உலகத்திலும் கண்டவன்; மனிதர்களைக் கடவுள் நிலைக்கு உயர்த்த முடியும் என்று ஷெல்லியைப் போலவே நம்பியவன்; தொழிலாளி மக்களைப் போற்றிப் புகழ்ந்த வன், எனவே அவன் தனது ' தொழில்' என்ற பாட்டில் பின்வருமாறு பாடுகிறான்: இரும்பைக் காய்ச்சி உருக்கிடு வீரே! மந்திரங்கள் வகுத்திடு வீரே! கரும்பைச் சாறு பிழிந்திடு வீரே! கடலில் மூழ்கிநன் முத்தெடுப் பீரே! அரும்பும் வியர்வை உதிர்த்துப் புவிமேல் ஆயிரம் தொழில் செய்திடு வீரே! பெரும்புகழ் நுமக்கே இசைக் கின்றேன் பிரம தேவன் கலையிங்கு நீரே! - (பாட்டு. 1) இந்தப் பாடலில் பல்வேறு தொழில் செய்யும் தொழி லாளப் பெருமக்களையும் பாரதி படைப்புக் கடவுளர்களாக, 250