பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஷெல்லியின் ஆப்த. நண்பனான ஹாக் (Hogg) என்பவனும் "விலக்கப்பட்டான், ஷெல்லி விலக்கப்பட்ட செய்தி. அவனது தந்தைக்கு மிகுந்த அவமான உணர்ச்சியை ஏற்படுத்தியது; அத்துடன் ஷெல்லியின்மீது ஆத்திரமும் பிறந்தது. அவரோ நிலப்பிரபு; பாராளுமன்ற அங்கத்தினர்; கிறிஸ்தவர். எனவே மகனின் நாஸ்திகப் பிரகடனம் அவருக்கு நாராச மாக இருந்தது. அவருக்குத் தம் மகன் ஹாகுடன் சேர்ந்து குட்டிச் சுவராகப் போய்விட்டதாக எண்ணம். எனவே அவர் தம் மகனுக்குக் கோபத்தோடு கடிதம் எழுதினார். ஹாகிடமிருந்து எல்லாத் தொடர்புகளையும் அறுத்துக் கொண்டு, பிறந்த ஊருக்குத் திரும்பிவந்து, தாம் நியமிக்கும் பெரிய மனிதர்களின் கீழிருந்து, அவர்கள் சொல்படி நடக்கவேண்டுமென்றும், அவ்வாறு ஷெல்லி நடக்காவிட்டால் அவன் தம்மிடமிருந்து இனி எந்த உதவியையும் எதிர்பார்க்க வேண்டாமென்றும் எழுதினார், ஷெல்லியோ அவரது எந்த நிபந்தனையையும் ஏற்பதற்கில்லை யென்றும், எத்தனை தடவை எழுதினாலும் இதுவேதான் பதிலாகும் என்றும் பதில் எழுதிவிட்டான். அதன்படியே அவர் பல்வேறு சமயங்களில், பல்வேறு ரூபங்களில் முயன்றும், ஷெல்லி அவருக்குப் பணிந்து போகவில்லை. இதனால் ஷெல்லிக்கும் அவனது தந்தைக்கும் இருந்த தொடர்பு முறிந்தது. இந்நிலையில் பிரபுவீட்டுப் பிள்ளை யாகப் பிறந்த ஷெல்லி, தன் பலத்திலேயே நிற்க வேண்டிய நிலைக்கு ஆளானான், அதனால் ஏற்பட்ட வறுமை வாழ்க் கையையும் அவன் மனம் தளராமல் ஏற்றுக்கொண்டான். உணவுக்கும், குடியிருக்கும் இடத்துக்கும் கூட அ வ ன் திண்டாடினான். இந்தச் சமயத்தில் அவனது சகோதரிகள் தமது செலவுக்குக் கொடுக்கும் பணத்தில் மிச்சப்படுத்தி அவனுக்கு உதவினார்கள். இத்தகைய வறுமை வாழ்க் கையில் சிலகாலம் கழிந்த பின்னர்தான் அவனது உறவினர். ஒருவரது முயற்சியால் ஷெல்லியின் தந்தை அவனுக்காகும் குறைந்தபட்சச் செலவுக்கென ஓரளவு பணம் அனுப்ப முன்வந்தார்; அவனது தாத்தாவின் மரணத்துக்குப் பின்னர் தான், வாரிசுத சர் என்ற முறையில் அவனுக்கு அதிகமான