பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உண்மைதான். அவனது காலத்தில் மிகவும் செம்மையற்ற முறையிலேயே புரிந்துகொள்ளக் கூடிய ஒரு பொருளாதார மாற்றத்தைப் பற்றிய ஒரு திட்டமான ஞானத்தை ஷெல்லி யிடம் நாம் எதிர் பார்க்க முடியாது. ஆயினும், உழைப்புக் கும் மூலதனத்துக்கும் உள்ள உறவுகளை எடுத்துக் காட்டும் தன்மைகளைப் பற்றிய முக்கியமான உண்மையை, ஏழைத் தொழிலாளர்களே சோம்பேறிகளான பணக்காரர்களின் ஆதரவாக உள்ளனர், சோம்பேறித்தனத்தை நிலை நாட்டி வருவதற்கே தொழில் துறை பயன்படுத்தப்படுகிறது என்ற உண்மைகளை, அவன் தனிச்சிறப்புமிக்க முறையில் தெள்ளத் தெளிவாகக் கண்டுணர்ந்திருந்தான். அவனது எழுத்துக்களின் பல பகுதிகளிலிருந்தும் இது தெளிவாகின்றது. இவரே பிறி தோரிடத்தில், இயல்பான, சமதையான சர்வஜன விடுதலை -இதுவே ஷெல்லி பாடலின் ஆதார சுருதியாகவும் உத்வேக சக்தியாகவும் உள்ளது, அவனது லட்சியம் கம்யூனிச சமுதாய 'லட்சியமே. அந்தச் சமுதாயத்தில் சுதந்திரமான, சுயம்பு

  • வான உபகாரத் தன்மையானது, அதிகாரம் அரசாங்கம்

ஆகியவற்றை நீக்கிவிட்டு இடம்பெறும் ; ' அங்கு அன்பின் ஆட்சியானது சட்டத்தின் ஆட்சியை நீக்கி, அதன் இடத்தில் இடம்பெறும்; அங்கு மனித இதயத்தின் எளிமையான அன்பு 'மிகுந்த உணர்ச்சிகள், மதம் அல்லது நன்னெறிக் கோட் பாடுகள் எதனையும் காட்டிலும் புனிதமானவையாக விளங்கும் என்று எழுதுகிறார். {Percy Bysske Shelley: Poet and Pioneer-Henry. S. Salt), இவையெல்லாவற்றையும் காட்டிலும், பொதுவுடை மைத் தத்துவத்தின் பிதாமகனான காரல் மார்க்ஸே ஷெல் லியைப் பற்றிப் பின்வருமாறு பாராட்டிக் கூறுகிறார்: 'பைர னுக்கும் ஷெல்லிக்குமுள்ள உண்மையான வேற்றுமை பின் வருமாறு: இவர்களைப் புரிந்துகொண்டு போற்றுபவர்கள், பைரன் தனது முப்பத்தியாறாவது வயதிலேயே மறைந்து போனது அதிருஷ்டகரமானது என்றே கருதுகிறார்கள்; ஏனெனில் நெடுங்காலம் உயிர்வாழ்ந்திருந்தால், அவன் ஒரு பிற்போக்கான பூர்ஷ்வாவாகவே மாறியிருப்பான். ஆனால் 282