பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இதே போன்று இத்தாலியிலுள்ள நேப்பிள்ஸ் நகரத்தில் 1820-ம் ஆண்டில் அரசியல் சட்டபூர்வமான அரசாங்கத் தைப் பிரகடனம் செய்த செய்தியைக் கேள்விப்பட்டதும், அவன் நேப்பிள்ஸ் மீதும் ஒரு பனுவல் (Ode to Naples) பாடி னான். அந்தப் பாடலிலும் அவன் சுதந்திரத்தைப் பலவாறு பாராட்டியுள்ளான். இவ்வாறு பல்வேறு சந்தர்ப்பங்களில் தர்மாவேசத்தினால் பாடிய பாடல்களைத் தவிர, சுதந்திரத்தை அவன் ஹெல்லாஸ் (Helias) முதலிய நெடுங் கவிதைகளிலும், சில தனிப்பாடல்களிலும் போற்றிப் பாடியுள்ளான். ஷெல்லி யைப் பொறுத்தவரையில், அவன் சுதந்திரத்தை மனித உணர்ச்சிகளிலேயே மகோன்னதமானதாக மதித்தான்; மேலும் சுதந்திரத்தை ஒடுக்கும் எந்த ஓர் அரசாங்க அமைப் பையும் சீர்திருத்த வேண்டும் அல்லது ஒழித்துக் கட்ட வேண்டும் என்று கருதினான் என்று எட்மண்ட்ஸ் கூறுகிறார். மேலும் அவர் ஷெல்லியின் சுதந்திர ஆவேசத்தையும், அது பற்றிய அவனது கண்ணோட்டத்தையும் குறிப்பிடும்போது, அவனது அபூர்வமான, வெளியிடப்படாத “சீர்திருத்தம் பற்றிய தத்துவார்த்த நோக்கு' என்ற கட்டுரையில், அவன் தனது கருத்தைக் கூறுகையில் பரிபூரண சுதந்திரம், சமத்துவமான சட்டங்கள், எல்லோருக்கும் சமத்துவமான நியாயம் ஆகியவற்றை ஆதரித்துள்ளான்... பொதுமக்களைப் பொருளாதார, ஆத்மார்த்த அடிமைத்தனங்களிலிருந்து விடுதலை பெறச் செய்வதே அவனது அரசியலின் கேந்திர நோக்கமாக இருந்தது; அவனது 'அராஜகத்தின் முகமூடி' {Mask of Ariarchy) என்ற பாடல் அவனது இந்த வேட்கை யைத் தெளிவாக வெளியிடுகிறது என்றும் எழுதியுள்ளார் {Shelley and His Poetry-E.W, Edmunds). இந்தக் கவிதை யையும் இதனுடன் சேர்ந்து இதே காலத்தில் எழுதப்பட்ட

  • இங்கிலாந்தின், மக்களுக்கான பாடல்' (Song to the Men of

El gland) என்ற - கவிதையையும் நாம் ஓரளவு தெரிந்து கொள்ளவேண்டியது மிகவும் அவசியமாகும். இங்கிலாந்திலுள் ள' ' மான்செஸ்டர்' என்ற தொழில் நகரத்தில் 1819-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதியன்-று கூடிய