பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கொண்டு விடுகிறார்கள் என்பதுதான் ஷெல்லி “ராணி மாப்' கவிதையில் வெளியிடும் கருத்தாகும். மன்னராட்சியை மறுக்கின்ற பாரதி கொடுங்கோல் மன்னரின் ஆட்சியை, ஷெல்வியைப் போலவே கொதித் தெழுந்து கண்டித்தான். 'சுதந்திரமான மக்கள் மன்னன் என்ற பெயரையே பூமிப்புழுதியில் மிதித்துப் போக்கு வார்கள்' என்று ஷெல்லி கூறினான். பாரதியோ பாஞ்சாலிக் குக் கொடுமையிழைத்து வீதிவழியே இழுத்து வரும் இளவரச னான துச்சாதனனை அனுமதித்துக் கொண்டிருந்த. அடிமை களான ஊரவரைப் பற்றிப் பின்வருமாறு கொதித்துக் குமுறு - கிறான்: உவரவர்தம் கீழ்மை உரைக்கும் தரமாமோ? வீரமிலாநாய்கள்! விலங்காம் இளவரசன் தன்னை மிதித்துத் தராதலத்தில் போக்கியே பொன்னை அவளந்தப் புரத்தினிலே போக்காமல் நெட்டை மரங்களென நின்று புலம்பினார் பெட்டைப் புலம்பல் பிறர்க்குத் துணையா மோ? : ' (பாட்டு 271, வரிகள் 17.21) . பார்த்த காலத்து அஸ்தினாபுரத்து மக்களைக் கடிந்துரைக் குப் இந்த வார்த்தைகளின் மூலம், இருபதாம் நூற்றாண்டின் பாரத மக்களிடத்தில் தர்மாவேச உணர்ச்சியும், கொடுங் கோன்மைக்கு எதிரான எண்ணமும் தோன்றும் வண்ணம் பாரதி. மறைமு9. மாகக் குரல் கொடுக்கிறான். எனினும் கொடுங்கோ லனைப் பற்றிய பாரதியின் சித்திரத்தை நாம் அவன் பாடியுள்ள புதிய ருஷ்யா' என்ற பாடலில் தான் க ணவேண்டும். நெப்போலியனின் வீழ்ச்சியை, ருஷ்ய நாட்டுக்கு வெளியேயிருந்து முதன் முதலில் வரவேற்றுப் பாடிய ஷெல்லியைப்போல், ஜார் மன்னனின் வீழ்ச்சியை முதன் முதலில் வரவேற்றுப் பாடிய கவிஞனாசவும் பாரதி தான் விளங்குகிறான். மன்னன் என்பவனை ஷெல்லி "ஓர் இதயமில்லா மிருகம், ஓர் அலங்காரக் கொலு, ஒரு பெயர்" என்று கூறுவதை நாம் முன்னர் பார்த்தோம். பாரதியோ கொடுங்கோல் மன்னனான ஜாரை, கொடுங்காலன்', -