பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A vengeful, pitiless and almighty. dend Whose mercy is a nickname for the rage of tameless tigers hungering for blood). கடவுளைப் பற்றிய ஷெல்லியின் கருத்துப்படி கொடுங் கோலரின் ரத்தப் பசியையும் கொடுமையையும் நியாயப் படுத்தும் உருவமாகவே கடவுள் காட்சியளிக்கிறார் என்றே நமக்குப் புலனாகிறது. அதாவது கடவுளின் படைப்பும் சுயநல் வாதிகளின், மாய்மாலக்காரர்களின் படைப்பாகவே அவனுக்குத் தோன்றுகிறது. எனவேதான் அ வ ன்

  • 'மதத்தோடு உடன் பிறந்த இரட்டைச் சகோதரியாக

சுய நலத்தைக் கருதுகிறான் (Twin sister . of religion, selfishness, படலம் 5, வரி 22). இவ்வாறு கருதியதால்தான் அவன் ஏசு கிறிஸ்துவைக் கூட, “ஜூடேயாவின் சிம்மாசனத்துக்கு வேட்கை கொண்ட ஓர் ஆசைக்கார மனிதன் ஏசு! என்று தனது ஆரம்பகாலக் குறிப்பொன்றில் எழுதி வைத்தான். எனினும் பிற்காலத்தில் அவன் ஏசுவின் தியாகத்தையும், அவர் போதித்த நல்லொழுக் கத்தையும் உணர்ந்து பாராட்டினான், உதாரணமாக, அவன் விட்டுச் சென்ற ஒரு கவிதைத் துணுக்கில், பின்வருமாறு குறிப்பிடுகிறான்: “ 'கிரேக்க நாட்டு ஏசு கிறிஸ்துவான் சாக்ரட் டீசும், ஏசு கிறிஸ்துவும் எல்லா உயிர்களும் ஒன்றையொன்று நேசிக்கவும், தத்தம் தவறுகளைப் பரஸ்பரம் மன்னிக்கவும், தமது இதயங்களில் ஒற்றுமையின்மையான'. பைசாசத்தை - ஒழிக்கவும் வேண்டி, அவர்களைத் தூண்டிக் கொண்டிருப்ப தில் என்றுமே ச.லித்ததில்லை ” {Fragrients contraceted wit' Epipsycliidios):- (And Socrates, the Jesus Christ of Greece And Jesus Christ Himself, did never cease To urge all living things to love each other And to forgive their mutual faults and smother: The Devil of disunion in their souls). இதைப் போலவே அவன் தனது 'ஹெல்லாஸ்' (Heilas) போன்ற கவிதைகள் சிலவற்றிலும் ஏசுவின் இந்த அம்சத்தைப் - பா. ஷெ-7 , 88