பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களில் மட்டும் தாஸ்திகர்களைப்பற்றிச் சில குறிப்புக்கள் தென்படுகின்றன, அவற்றில் இரு குறிப்புகளை நாம் இங்கு 2.Jார்ப்போம்:

    • தெய்வ பக்தி உள்ளவர்களாயினும், நாஸ்திகர்

கிளாயினும், எந்த மார்க்கஸ்தர்களாக இருந்தாலும், ஒரு 1மார்க்கத்தையும் சேராதவர்களாக இருந்தாலும், அவர் களுக்குத் தியானம் அவசியம்.... நாஸ்திகர்கூட இஷ்ட தெய்வம் இல்லாவிட்டாலும் வெறுமே தியானம் செய்வது நன்று. *உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்” என்பது குறள்: {'பாரத தேசத்தில் ஒவ்வொருவனும் செய்வதற்குரிய தி.17ாம்' என்ற கட்டுரை-கட்டுரைகள் : தத்துவம்). (1(கோவிலுக்குப் போனாலும் சரி; போகாவிட்டாலும் சரி; தெய்வத்தைக் கும்பிட்டாலும் சரி; கும்பிடா விட்டாலும் சரி?; பிறரை ஏமாற்றுவதை நிறுத்தினால் தெய்வம் அருள் புரியும். துளிகூட, ஓர் அணுக்கூட, மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரண சித்தி அடைவானாகில் . அவனே ஈசுவரன்" ('ய: 76கரத் தொழுவது?' என்ற கட்டுரை--கட்டுரைகள் : மேற்காட்டிய எந்தவொரு கூற்றிலும் பாரதி நாஸ்திகர் களைக் குறை கூறவோ, கண்டிக்கவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை. ஏனெனில் ஒருவன் நல்லவனா கெட்டவனா என்றறி இதற்கு அவன் நாஸ்திகனா, ஆஸ்திகனா எனப் பார்ப்பது உரைகல்லாகாது என்பதே பாரதியின் கருத்து என்று சொல்லலாம். வள்ளுவன் கூறுகின்றபடி, பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக் கல் (குறள்-595) என்பதைத்தான் பாரதி தனது உரைகல்லாகக் கொண் . டிருக்கிறான். எனவேதான் நாஸ்திகத்தைத் தான் ஏற்கா விட்டாலும் நாஸ்திகம் பேசுகின்ற காரணத்தால் அவன் நாஸ்திகர்களைக் கடியவோ, ஒதுக்கித் தள்ளவோ இல்லை.