பக்கம்:பாரதியும் ஷெல்லியும்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எனவே பாரதியின் தெய்வம் பிரபஞ்சத்துக்கு அப்பாற் "பட்ட ஒன்றாக இல்லை; மாறாக, பிரபஞ்சத்துக்குட்பட்ட, 'அதனுடன் ஐக்கியப்பட்ட, தத்துவமாகவே தோன்றுகிறது, எனவே அவன் மனிதனை நோக்கி “நீயும் அதனுடைத் தோற்றம்" என்று சுட்டிக் காட்டுகிறான். மேலும், மதங்கள் தொகுத்தவற்றுளெல்லாம் தலையாய விளங்கும் உண்மையும் அதுதான் என்று அவன் கருதுகிறான்: பூமியிலே வழங்கி பேரும் மதத்துக் கெல்லாம் பொருளினை நாம் இங்கெடுத்துப் புகலக் கேளாய்; சாமி நீ; சாமி நீ; கடவுள் நீயே; தத்வமஸி; தத்வமஸி; நீரே அஃதாம். (பாரதி அறுபத்தாறு-65) 'நீயே அது” (தத்வமஸி), நீயே கடவுள் என்பதுதான் மதங்களின் சாரம் என்கிறான் பாரதி. இதனையே அவன் தனது 'புதிய ஆத்திசூடி. 'யில் * ' தெய்வம் நீ என்றுணர் என்று சுட்டிக் காட்டுகிறான். இவ்வாறு கூறுகின்ற பாரதி தான் மேலே காட்டிய மேற்கோளின் படி 1 'துளிகூட, ஓர் அணுக்கூட, மற்றவர்களை ஏமாற்றுவதே கிடையாது என்று ஒருவன் பரிபூரணமாக - சித்தி அடைவானாகில், அவனே. ஈசுவரன்" என்று சொல்லி, தெய்வத்தை ஏற்றுக்கொள்ளாத நாஸ்திகர்களும்கூட தெய்வத்தன்மை பெறமுடியும் என்றும் கூறுகிறான். அதாவது மனிதன் தன்னையுணர்ந்து, தனது வாழ்க்கையைப் பரிபூரணமாகச் செம்மைப்படுத்தினால் அவன் தெய்வத்தன்மை எய்திவிடுகிறான் எனக் கருதுகிறான். - பாரதி மதங்கள் பலவும் கூறும் மறுமையின்பத்திலோ, , பிரபஞ்சத்துக்கு அப்பாற்பட்ட மறுவுலகத்திலோ, அல்லது உலகத்தை அநித்தியமானது என்றும், மாயையாவது என் றும் கூறும் மாயாவாதத்திலோ நம்பிக்கை கொள்ளவில்லை: அவற்றை அவன் ஆணித்தரமாக மறுக்கவும் செய்கிறான். மேற்கூறிய 'உயிர்பெற்ற தமிழர்' பாட்டில், '* நித்தியமாம் இவ்வுலகு எனப் பிரபஞ்சத்தைக் குறிப்பிடுகிறான், மாயா வாதத்தையோ, தனது 'பொய்யோ, மெய்யோ? என்ற கவிதையில் வன்மத்தோடு கண்டிக்கிறான்: