பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. ஆறில் ஒரு பங்கு முகவுரை ஒரு ஜாதி ஓர் உயிர்; பாரத காட்டிலுள்ள முப்பது கோடி ஜனங்களும் ஒரு ஜாதி. வகுப்புக்கள் இருக்கலாம்; பிரிவுகள் இருக்கலாகாது. வெவ்வேறு தொழில் புரியலாம்; பிறவி மாத் திரத்தாலே உயர்வு தாழ்வு என்ற எண்ணம் கூடாது. மத பேதங்கள் இருக்கலாம்; மத விரோதங்கள் இருக்கலாகாது. இவ் வுணர்வே நமக்கு ஸ்வதந்திரமும், அமரத் தன்மையும் கொடுக்கும். 'நாங்ய : பந்தா வர்த்ததே அயகாய -வேறு வழி யில்லே, இந்நூலே, பாரத காட்டில் உழவுத் தொழில் புரிந்து நமக்கெல் லாம் உணவு கொடுத்து ரகூவிப்பவர்களாகிய பள்ளர், பறையர் முதலிய பரிசுத்தத்தன்மை வாய்ந்த வைசிய சகோதரர்களுக்கு அர்ப்பணம் செய்கிறேன். ஆசிரியன் அத்தியாயம் 1 மீளும்பாள் வீணை வாசிப்பதிலே ஸரஸ்வதிக்கு நிகரானவள். புரசைபாக்கத்திலுள்ள எங்கள் வீட்டிற்கு அவள் வரும் சமயங் களிலெல்லாம் மேல் மாடத்து அறையை அவளுடைய உபயோகத் துக்காகக் காலி செய்து விட்டு விடுவது வழக்கம், கிலாக் காலங் களில் இரவு எட்டு மணிக்கெல்லாம் போஜனம் முடிந்துவிடும். ஒன்பது மணி முதல் நடுகிசி வரையில் அவள் தனது அறையில் இருந்து வீணே வாசித்துக் கொண்டிருப்பாள். அறைக்கு அடுத்த வெளிப்புறத்திலே பந்தலில், அவளுடைய தகப்பனர் ராவ்பகதூர்