பக்கம்:பாரதி தமிழ் வசனத் திரட்டு.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வேப்பமரம் 4? ஸாதாரணமாக மரங்கள் மனிதரைப் போலவே பகல் முழுவதும் விழித்துக் கொண்டிருக்கும். இரவானவுடனே தூங்கும். அன்றிரவு எனக்கு எந்தக் காரணத்தாலோ தூக்கமே வரவில்லை. கிலாவையும், வானத்தையும், சூழ்ந்திருக்கும் மரங்களையும் பார்த்துக் கொண்டு பிரும்மானந்தத்தில் மூழ்கியிருந்தேன். அப்போது பதினறு வயதுடைய, மிகவும் அழகான மனித ஆண் பிள்ளையொருவனும், அவனைக் காட்டிலும் அழகான பன்னிரண்டு வயதுடைய மனிதப் பெண் ஒருத்தியும் அதோ .தெரிகிற கதியில் விளையாடிக் கொண்டிருப்பதைக் கண்டேன். சிறிது நேரத்துக் குள்ளே அவ்விருவரும் சாமானிய மனிதரில்லையென்பது எனக்குத் தெளிவாய் விட்டது. சிறகுகளில்லாமல் அவர்கள் வானத்தில் பறந்து விளையாடுவது கண்டேன். பிறகு ஒருவருக் கொருவர் பேசிய வார்த்தைகளிலிருந்து அவர்கள் இன்னரென்று தெரிந்து கொண்டேன். அவ்விருவரும் யாரெனில் அகஸ்திய மஹரிஷியும் தாமிரபரணியம்மனும். அகஸ்தியர் சாதாரண காலத்தில் கட்டை விரலளவுடைய வடிவங்தரித்திருப்பது வழக்கம். ஆனால் அவர் காமரூபி. அதாவது, கினேத்தபோது கினேத்த வடிவங்தரிக்கும் திறமை படைத்தவர். தாமிரபரணி யம்மனும் அப்படியே. ஆதலால் அவ்விருவரும் அப்போது அதிசுந்தரமான மனுஷ்ய ரூபந்தரித்து விளையாடிக் கொண்டிருக் தார்கள். அவர்களுடைய கிரீடை பொழுது விடியும்வை கடந்தது. அப்பால் தாமிரபரணி மறைந்து விட்டாள்........... ”, வேப்ப மரம் சொல்லுகிறது: " கேளாய், மானுடா, கவனத்து டன் கேள். தாம்ரபர்ணியம்மன் பகலைக் கண்டவுடன் மறைந்து சென்றுவிட்டாள். அகஸ்தியர் மாத்திரம் தனியாக வந்து எனதடியில் இப்போது t கிற்குமிடத்திலே படுத்துக் கொண்டு யோகநித்திரையில் ஆழ்ந்தனர். எனக்கு அந்த மையத்தில் அகஸ்தியருடைய சக்திகளெல்லாம் என்ருகத் தெரியாது. ஆதலால், அவர் யோகத்திலிருக்கிருரென்பதை அறியாமல் ஜலக்கிரீடையின் சிரமத்தால் சாதாரண கித்திரையிலிருக்கிரு ரென்று கினைத்தேன். பொழுது விடிந்து ஏறக்குறைய ஒரு ஜாமமாயிற்று. அப்போது அதோ, உனக்கெதிரே ஒரு புளிய மரம் கிற்கிறது பார் - அந்த மரத்தின் கீழேயுள்ள புற்றிலிருந்து