பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

109 இருந்தது என்பதாவது:- ஒலை காய்ந்த பனை மட்டை கள் காற்றினால் சலசல' என்று பேரொலி எழுப்புவதா கும். பனங்காட்டு நரி சல சலப்புக்கு அஞ்சாது என்னும் பழமொழி ஈண்டு எண்ணத் தக்கதாகும். கட்டுக்கு அடங்கா நகைப்பு என்பது: பனை மட்டைகள் ஓயாது சலசலத்துக் கொண்டிருப்பதாகும். சல சலப்பொலி, கல கல என்று சிரித்தார் என்பதில் குறிப்பிடப்படும் ஒலி யாகும். கல கல என்று கொட்டிற்று என்பது: ஒருவர் அளவு மீறிப் பேரொலியுடன் தொடர்ந்து சிரித்தால், இன்னொருவர் அவரைப் பார்த்து போதும் சிரித்தது; நிரம்பக் கொட்டி விடாதே-பல் கொட்டிவிடப் போகிறது’ என்று கூறும் உலகியலும் ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. மேலும், கொட்டுதல் என்பது மிகுதியைக் குறிப்பதற்கு இன்னொரு சான்றும் வருமாறு: தண்ணீரைச் சிந்தினார் -தண்ணீரைத் தெளித்தார் - என்பன, சிறிதளவு தண்ணி ரையே குறிக்கும். தண்ணீரைக் கொட்டினார் என்பதோ -தண்ணீரின் மிகுதியைக் குறிக்கும். ஏன் - கலத்திலுள்ள தண்ணீர் முழுவதையுமே குறிக்கும். இவ்வளவு சொல் நயங்களும் பொருள் நயங்களும் கவிஞரின் இப்பாடலில் அமைந்திருப்பது, மிகவும் சுவை பயக்கின்ற தன்றோ! இனிய இந்தப் பாடல், பாரதி தாசனாரின் இரண்டாம் கவிதைத் தொகுப்பில் மாவலி புரச் செலவு என்னும் தலைப்பில் உள்ள பத்துப் பாடல்களுள் ஐந்தாம் பாடலாகும். அந்தப் பத்துப் பாடல்களையும் இங்கே தரின், கவிஞரின் இலக்கியச் சிறப்புக்கு வேறொன்றும் தேவையில்லை. அவ்வளவு சிறந்த கற்பனைகளும் உவமைகளும் தற்குறிப் பேற்றமும் சமுதாயக் கருத்து களும் இன்ன பிறவும் இப்பாடல்களில் பொதிந்துள்ளன. முன்னுரையுடன் அப்பாடல்கள் வருமாறு: