பக்கம்:பாரதி தாசரொடு பல ஆண்டுகள்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 வந்த நான் சில மாதங்களாகப் புலாலை விட்டுவிட்டு மரக் கறி உணவு மட்டுமே சாப்பிட்டு வருகிறேன் என்று கவிஞர் கூறினாராம். உடனே டாக்டர், அதன் விளைவுதான் இது. பல ஆண்டுகளாகப் புலாலையே புசித்துப் பழக்கப்பட்டு விட்ட நீங்கள், இனிப் புலாலை நிறுத்தினால் வாழமுடி யாது-நீங்கள் மட்டுமல்லர் - உங்களுக்குப் பிறந்த பிள்ளை களும் புலால் உணவை உண்டாக வேண்டும் - எனவே, இன்றைக்கே புலால் புசிக்கத் தொடங்கி விடுங்கள்-என்று பரிந்துரை செய்தாராம். அன்று முதல் கவிஞர் மீண்டும் புலால் புசிக்கத் தொடங்கி, இழந்த வலுவை மீட்டாராம். இச்செய்தியும் கவிஞர் என்னிடம் நேரில் கூறியதாகும். மருத்துவரின் பரிந்துரையைச் சிலர் மறுக்கலாம். ஆனால் சிறிது சிறிதாகப் புலாலைக் குறைத்துக் கொண்டு வந்தால் நலம் பெறலாம். மற்றும், மிகுதியாக மது அருந்திப்பழகியவர்கள் திடீரென மதுவை நிறுத்தக்கூடாது -சிறிது சிறிதாகவே குறைக்க வேண்டும் என்று சொல்லப் படுவதும் உண்டு. மற்போர்: புதுச்சேரியில் ஒருவர் கவிஞரோடு பகைத்துக்கொண்டு தொல்லை கொடுத்துக் கொண்டு இருந்தாராம். அவர் விட்டிற்கு எதிரில் ஒரு காலி மனை இருந்ததாம் இளைஞ ராகிய கவிஞர் சில நாள் சிலரை அழைத்துக் கொண்டு வந்து அந்தக் காலி மனையில் சிலம்பம், மற்போர் முதலிய பயிற்சிகளைக் கற்றுக் கொடுத்தாராம். இது காலி மனை யின் எதிர் வீட்டுக்காரரை அச்சுறுத்துவதற்கே யாம். அவ் வாறே அவர் பின்னர் கவிஞரோடு மோதுதலைக் கைவிட்டு விட்டாராம்.