பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரதப் பண்பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் சிந்தனை பற்றியும் அதன் வழியில் தத்துவ ஞானம், அரசியல் பொருளாதாரம் சமுதாய வரலாறு பற்றியுமான ஐரோப்பிய சிந்தனைகள், ஐரோப்பாவில் நிகழ்ந்த தீவிரமான கருத்துப்போராட்டங்கள், தொழில் புரட்சி மூலம் நிகழ்ந்த சமுதாய மாற்றங்கள் முதலியவை பற்றி, இலக்கியங்கள் மூலம் ஐரோப்பிய சிந்தனை வளர்ச்சி பற்றிய அறிமுகம் ஏற்பட்டது. o அத்துடன், சோவியத் யூனியனின் தோற்றமும் வளர்ச்சியும் சர்வதேச கம்யூனிஸ்ட்இயக்கத்தின் ஆவணங்கள், இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள், தொடர்ச்சியான அறிக்கைகள் தீர்மானங்கள் ஆகியவற்றையும் ஆழ்ந்து படிக்க நேர்ந்தது. சீனாவின் கம்யூனிஸ்ட் இலக்கியங்களையும் படிக்க நேர்ந்தது. இந்திய நாடு சுதந்திரம் பெற்ற பின்னர், நாட்டின் வளர்ச்சிக்கான பாதை எந்தத் திசையில் செல்ல வேண்டும் என்பது தொடர்ச்சியான விவாதப் பொருளாக இருந்து வந்திருக்கிறது. இதில் ஆங்கில (ஐரோப்பிய) சிந்தனைப் போக்குகளுக்கும் இந்திய சிந்தனைப் போக்குகளுக்கும் இடையில் அடிப்படையானமோதல் இருந்து வந்திருக்கிறது.இந்த மோதலில் பல பெரிய அரசியல் கட்சிகளும் கூட பிளவுபட்டு உடைந்திருக்கின்றன. சுதந்திரம் அடைந்தபோது இந்திய நாடும் உடைந்தது. இந்தியா, பாகிஸ்தான் பின்னர் பாகிஸ்தானிலிருந்து பங்களாதேஷ் எனப்பிரிந்து பிளவுபட்டிருக்கின்றன. இந்திய நாட்டின் வெளியுறவுக் கொள்கை, இந்திய நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாடு, இந்திய மக்களின் ஒற்றுமை, நாட்டின் தற்காப்பு பலம், இந்திய நாட்டின் தொழில் வளர்ச்சி, விவசாயப் பிரச்சினை, உற்பத்திப் பெருக்கம், மக்களின் சுகாதாரம், நல்வாழ்வு பல துறைகளிலும் நாட்டின் ஒன்றிணைப்பு இந்திய மக்களின் ஆன்மீக பாரம்பரியத்தின் மேன்மை, ஒட்டுமொத்தமான அரசியல், பொருளாதார, சமுதாய, கலாச்சார, ஆன்மீக வளர்ச்சி பற்றிய பல்வேறு பிரச்சினைகளும் எழுந்து அவைகளுக்குச்சரியான தீர்வுகாண்பதில் இந்திய மக்களிடையில் நூறாண்டு காலத்திய போக்குகளும், இந்திய பாரம்பரியத்தின் தொடர்ச்சியான இந்திய சிந்தனைப் போக்குகளும் எழுந்து அலைமோதியிருக்கின்றன. இன்னும் அது தொடர்கிறது. திரு. அ.சீனிவாசன் தன்னுடைய ஐம்பது ஆண்டுக் காலத்திற்கு மேலான பொது வாழ்க்கை, பத்திரிக்கைப் பணிகள், தொழிற்சங்க இயக்கப் பணிகள், விவசாயிகளின் போராட்ட அனுபவங்கள், ஐந்தாண்டு திட்டங்களின் வளர்ச்சிப் போக்குகள் பற்றிய படிப்பு. இந்திய நாட்டின் அரசியல் வளர்ச்சி ஆகியவற்றின் அனுபவத்தில் தான் அதுவரை பணியாற்றிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து சித்தாந்த சிந்தனை, அரசியல் கொள்கைகள் அவைகளின் செயல்பாடு, அமைப்புநிலைப்பணிகள், அணுகும் முறை ஆகிய பல பிரச்சினைகளிலும் தனக்குச் சொந்தமான கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு ህ{) அக்கட்சியிலிருந்து விலகி 1999ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பாரதிய ஜனதாக் கட்சியில் சேர்ந்து அக்கட்சியின் தலைமையின் கீழ் சமுதாயப் பணி ஆற்றிவருகிறார். ஒரே நாடு பத்திரிகை, மற்றும் விஜயபாரதம் ஆகிய பத்திரிகைகளில் பணியாற்றியும் எழுதியும் வருகிறார். அத்துடன் சொந்தமாகவும் பாரதி, கம்பன், சிலப்பதிகாரம், திவ்யப் பிரபந்தம் தொடர்பான பல நூல்களும் எழுதியும் பதிப்பித்தும் வெளியிட்டும் வருகிறார். அதன்படி பாரதப் பண்பாட்டு தளத்தில் பாரதி, பாரதியின் புதிய ஆத்திசூடி-ஒரு விளக்கவுரை, சிலப்பதிகாரத்தில் வைதீகக் கருத்துகள், கம்ப நாடன் காவியத்தில் காதலும் பெருங்காதலும் ஆகிய நூல்கள் எழுதி வெளியிட்டுள்ளார். இந்த நூல்கள் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் சிறந்த நூலுக்கு உதவித் திட்டத்தின் கீழ் உதவி பெற்றிருக்கிறது. அத்துடன் திரு. அ. சீனிவாசன் எழுதிய சிலப்பதிகாரமும் திவ்யப் பிரபந்தமும் - ஒரு ஆய்வு என்னும் நூலை பிரபல புத்தக வெளியீட்டு நிறுவனமான பழனியப்பா பிரதர்ஸ் வெளியிட்டிருக்கிறது. மேலும் திரு. அ. சீனிவாசன் எழுதி முடித்து அச்சில் உள்ள ஆழ்வார்களும், பாரதியும், பாரதியின் தேசீயம், கம்பன் ஒரு சமுதாயப் பார்வை, கம்பன் காவியத்தில் விதியின் பிழையும் அறத்தின் வெற்றியும் என்னும் நூல்கள் விரைவில் வெளிவரவுள்ளன. மேலும் பாரதி, கம்பன் தொடர்பாக வேறு சில நூல்களும், கிராமங்களை நோக்கி, இந்தியப் பொருளாதார சிந்தனைகள், பாரதியும் பகவத் கீதையும் முதலிய நூல்களும் எழுதிக் கொண்டு வருகிறார். பாரதி தொடர்பாக பல நூல்களை எழுதியும் பாரதி புகழ் பரப்புவதில் பங்கு கொண்டும் வருவதால் திரு. அ. சீனிவாசன் பாரதிய ஜனதா கட்சி வட்டாரத்தில் பாரதி சீனிவாசன் என்று அழைக்கப்பட்டு வருகிறார். 書--------------------------- 4-4---------------- கார்