பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி-புதிது.pdf/52

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பக பாட்டுத் தளத்தில் பாரதி அ. சீனிவாசன் ஆட்டு மந்தையாம் என்று - உலகை அரசர் எண்ணி விட்டார். காட்டும் உண்மை நூல்கள் - பல தாங் காட்டினார்களேனும் நாட்டு ராஜ நீதி - மனிதர் நன்கு செய்ய வில்லை." "ஒரஞ் செய்திடாமே - தருமத் துறுதி கொன்றிடாமே சோரம் செய்திடாமே- பிறரைத் துயரில் வீழ்த்திடாமே ஊரையாளும் முறைமை - உலகில் ஓர் புரத்துமில்லை" ாறு கூறி பாரதி அரசியல் நெறியின் ஆட்சி முறையின் அவல நிலை பறி உள்ளம் நொந்து குறிப்பிடுகிறார். காயுருட்டலில் பாஞ்சாலியை பணயமாகச் சகுனி வென்று விட்டான். துரியோதனன் மட்டற்ற மகிழ்ச்சி அடைந்து துள்ளி எழுந்தான். கூத்தாடினான். பனைக் கட்டித் தழுவிக் கொண்டான். பாஞ்சாலியை சபைக்கு அழைத்து வரும்படி துரியோதனன் ஆணையிட்டான். அப்போது உலகில் அதர் மக் குழப்பம் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார் பாரதி. திரெளபதியைதுரியோதனன் மன்றுக்கு அழைத்து வரச்சொல்லியது பற்றி அகத்தில் உண்டான அதர்மக் குழப்பம் என்னும் தலைப்பில் பாரதி தனது _தை வரிகளில் ஒரு அபூர்வமான காட்சியை முன்வைக்கிறார். அது இணையற்ற ஒரு அற்புதமான இலக்கியக் காட்சியாகும். இவை நமது _ளத்தை உலுக்கும் கவிதை வரிகளாகும். காவியத்தின் இந்தக் கவிதை வரிகள் பாரதியின் கவிதா மண்டலத்தின் சிகரத்தை எட்டியிருக்கிறது எனக் காங்ாப. நாமமே அழிந்து விட்டது. சத்தியமே பொய்யாகிவிட்டது.பெருமைமிக்க வங்கள் எல்லாம் பெயர் கெட்டுப் போய் மண்ணாகி விட்டன. தேவலோகத்தில் வாழும் தேவர்களின் வயிற்றில் எல்லாம் நெருப்புப் பற்றி அவர்கள் எரிந்து போனார்கள். மோனநிலையில் இருந்த முனிவர்கள் எல்லாம் முறைகெட்டுப் போய் மயங்கிக் கிடக்கிறார்கள். வேதங்கள் எல்லாம் அர்த்தமற்றுப் போய் வெறும் சொற்கள் ஆகிவிட்டன. அ நாதங்கள் எல்லாம் சீ குலைந்து போய் பாழாகிக் கெட்டு விட்டன. அழகிய கந்தவர்களெல்லாம் களையிழந்து போனார்கள். சித்தர் முதல் அந்தரத்தில் வாழ்வோர் எல்லாம் பித்தம் பிடித்து அலைகிறார்கள் படைப்புக கடவுளான நான்முகனுடைய பேச்சும் செயலும் அடங்கி விட்டன. கல்விக் கடவுளான நாமகட்கு புத்தி கெட்டு விட்டது. நீலமேக வண்ணனான திருமால் பல கோயில்களில் பள்ளி கொண் பெருமானாக இருக்கிறார்.திருவரங்கத்தில் கிடந்த வண்ணத்தில் இருக்கிறார். திருவனந்தபுரத்தில் அனந்தசயனத்தில் இருக்கிறார். இதை அறிதுயில் என்று கூறுவார்கள். அதாவது துங்குவதாக ஒரு பாவனையேயாகும். அந்த அறி துயிலை விட்டு பெரிய பெருமாள் ஆழ்துயிலில் நிரந்தரமாகத்துங்கிவிட்டார் போலும் செல்வமும் பேரழகும் வாய்ந்த திருமகள் தனது அழகு கெட்டுப் புகை மூடிபோனாள். நீக்கல் கடவுளான நீலகண்ட மகாதேவன் யோக நிலையை விட்டு மதி மயக்கம் கொண்டு விட்டான்.இன்னும் பராசக்தியைப் பற்றி அவள்மீது தீராத பக்தி கொண்ட பாரதி, வாலை, உமாதேவி, மாகாளி வீறுடையாள் மூலமகா சக்தி, திரிசூலம் ஏந்தியவள், மகாமாயை, சிங்க வாகனத்தில் ஏறி உலகைச் சீராகிக் காப்பவள். காலனுக்கே ஏவல் செய்பவள். பல் கணத்தாள் இவ்வாறு பலவாறு போற்றப்படும் ஆதி பராசக்தியின் நெஞ்சமும் கல்லாகி விட்டது. ஒளிமிக்க சூரியன் முகத்திலே இருள் படர்ந்து விட்டது. உலகில் தர்மக் குழப்பம் ஏற்படும்போது எவ்வாறு தெய்வக் குழப்பம் ஏற்படுகிறது என்பதை ஏதாவது கொடுமை நிகழும்போது "கடவுளுக்குக்கண் இல்லையா என்று சாதாரண மக்கள் கூறுவதைக் கவிஞன் தனது மகாசக்தி நிறைந்த கவித்திறனால் அற்புதமான கவிதை வரிகளில் உலகையும் உலக மக்களையும் விழிப்படையச் செய்யும் நோக்கோடு இந்த வரிகளை மனம் நொந்தும் அதே சமயம் சற்று ஆவேசத்துடனும் எடுத்துக் கூறுகிறான். பாரதியின் அந்த வலிமை மிக்க பாடல் வரிகளைக் கேளுங்கள். "தருமம் அழி வெய்தச்சத்தியமும் பொய்யாக பெருமைத் தவங்கள் பெயர் கெட்டு மண்ணாக வானத்துத் தேவர் வயிற்றிலே தீப்பாய மோன முனிவர் முறை கெட்டுத்தா மயங்க" "வேதம் பொருளின்றி வெற்றுரையே யாகி விட நாதம் குலைந்து நடுமையின்றிப் பாழாக கந்தர்வர் எல்லாம் களையிழக்கச் சித்தர் முதல் அந்தரத்து வாழ்வோர் அனைவோரும்பித்துறவே. நான் முகனார் நாவடைக்க, நாமகட்கு புத்தி கெட