பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 136 பயிர் செய்யவும், எண்ணையும் பாலும் பெருக்கிடவும் இழைகள் நூற்று நல்லாடைகள் செய்யவும், மேலும் பல்லாயிரம் தொழில்கள் செய்யவும் பாரதி ஆணையிட்டுக் கூறுகிறார். பாரதி எப்போதும், தொழில் செய்வது கல்வி கற்பது, அறிவை வளர்ப்பது பற்றி மட்டும்கூறுவதில்லை. அத்துடன், பாட்டு, செய்யுள், பரத நாட்டியம், கூத்து மற்றும் உலகத்தின் பொருள்கள் அனைத்தையும் பற்றியும் புதிய சாத்திரங்கள், நூல்கள் ஆகியவைகளைப் படைக்கவும் நாட்டில் நல்லறத்தை நிலைநாட்டி இன்பங்கள் ஊட்டவும் கூறி "தேட்டமின்றி விழி எதிர்காணும் + தெய்வமாக விளங்குவிர்நீரே"என்று பாடி முடிக்கிறார். அரசியல் நெறி பற்றி பாரத நாட்டின மரபு வழியில் நின்று பல புதுநெறிக் கருத்துக்கள் முன் வைக்கிறார். ஆட்சி முறையில் செங்கோன்மை, கொடுங்கோன்மை என்று நமது முன்னோர்கள் பல சாத்திரங்கள் மூலமாக இலக்கணம் வகுத்துள்ளனர். அரசு, அமைச்சு, அங்கம், நிர்வாகம், குடிமக்கள் பற்றிய பல சீரியகருத்துக்களை வகுத்துள்ளனர். சபை கூடிக்கலந்து பேசி முடிவுகளும் தீர்மானங்களும் எடுப்பது என்பது மன்னராட்சி காலத்திலும் கூட பல மரபுகளும் நெறிமுறைகளும் இருந்திருக்கின்றன. அதே சமயத்தில் கொடுங்கோன்மைகளும், போர்களும், கொடுமைகளும் படுகொலைகளும் நிகழ்ந்திருக்கின்றன. பாஞ் சாலி சபத் தி ல் துரியோதனன் சபையை ப் பற்றி க் குறிப்பிடும்போது அறமறிந்த விட்டுமன், மெய்ந்நெறி விதுரன், பொய்ந் நெறிதம்பியர், புலை நடைச் சகுனி முதலியோர் இருந்ததைக் குறிப்பிடுகிறார். மதக் கொலைகளும் அரசர் தம் கூத்துக்களும், மூத்தவர் பொய்நடையும் நிலவிய கதைகளைப் பற்றியும் குறிப்பிடுகிறார். அரசியலில் இன்றை நாள் வரையிலும் அறமில்லாத மறவர், குற்றமே தனது மகுடமாகக் கொண்டோர், மற்றைய மனிதரை அடிமைப்படுத்தவே முற்றிய அறிவின் மறையென்றெண்ணுவார். பற்றையரசர் பழிபடு படையுடன் சொற்றை நீதி தொகுத்து வைத்திருந்தார். இத்தகைய பழிபடு அரசியலை மாற்றி, புவிமீசைத்தருமமே அரசியலதனிலும் பிற இயல் அனைத்திலும் வெற்றி தரும் என வேதம் சொன்னதை பாரத நாடு முற்றும் பேண முற்பட்டு உலகிற்கு புது நெறி காட்டப்போகிறது என்று கூறுகிறார். இது பாரதி கூறும் அரசியல் நெறியின் அடிப்படையாகும்.