பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் IO "வேதங்கள் கோத்துவைத்தான் - அந்த வேதங்கள் மனிதர்தம் மொழியில் இல்லை வேதங்கள் என்று புவியோர் - சொல்லும் வெறுங்கதைத் திரளில் அவ்வேதமில்லை வேதங்கள் என்றவற்றுள்ளே அவன் வேதத்திற் சில சில கலந்த துண்டு வேதங்களன்றி யொன்றில்லை - இந்த மேதினி மாந்தர் சொலும் வார்த்தையெல்லாம்" என்று குறிப்பிடுவதைக் காண வேண்டும். பொதுதர்மங்களும் குறிப்பிட்ட தர்மங்களும் இந்து சாத்திரங்களில் சில பொதுவான தர்மங்கள், கடமைகள், நெறிமுறைகள் ஒழுக்கங்கள் கூறப்பட்டுள்ளன. அவை எல்லாக் காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் பொதுவானவை. இத்தகைய ஒழுக்கங்கள் பலவும், இந்திய சாத்திரங்களில் மட்டுமல்ல, உலகின் இதர பல வேறு சமயநூல்களிலும், பொது நூல்களிலும் இலக்கியங்களிலும் கூறப்பட்டுள்ளன. உண்மை பேச வேண்டும், பொய் சொல்லக்கூடாது, திருடக்கூடாது, சுத்தமாக இருக்க வேண்டும். புலனடக்கம் கொள்ள வேண்டும், யாருக்கும் கெடுதல் செய்யக்கூடாது. ஈதல், இரக்கம் காட்டுதல், எளிமையாக இருத்தல், சிக்கனமாக இருத்தல், கோபம் கொள்ளதிருத்தல், பொறாமை கொள்ளாதிருத்தல், எல்லோரிடமும் அன்பாக இருத்தல், மனிதன் தனது சக மனிதர்களிடத்திலே காட்ட வேண்டிய பண்பு, வாழ்க்கை நெறிமுறை, தாயன்பு, தந்தையிடம் மரியாதை, சகோதர அன்பு, பரிவு, பாச உணர்வு, இத்தியாதி, இத்தியாதி. பாரதி காலத்தில் நாடு அன்னிய ஆட்சிக்கு அடிமைப்பட்டுக் கிடந்தது. அ டி ைம ப் பட் டு கிடந்த மக்களைத் த ட் டி எழு ப் ப பொருந்துவதுமான பலதர்மங்களையும் கடமைகளையும், ஒழுக்க நெறிகளையும் மிகுந்த உள்ளுணர்வுடன், நாட்டுப்பற்றுடன், நமது பண்பாட்டிலும் பழக்க வழக்கங்களிலும் நடைவுடைபாவனைகளிலும் திளைத்து தெய்வங்களை வேண்டி வரமாகக் கேட்கிறான். தனது சொந்த ஆணையாகவும் கட்டளை இடுக்கிறான். பாரதி தனது பாப்பாப் பாட்டு மூலம், பொய் சொல்லக்கூடாது. புறம் சொல்லல் ஆகாது, பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளலாகாது, துன்பம் நெருங்கிவந்தபோதும் நாம் சோர்ந்திடலாகாது.