பக்கம்:பாரத பண்பாட்டு தளத்தில் பாரதி.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"பாரதப்பண்பாட்டு தளத்தில் பாரதி அ.சீனிவாசன் 28 துரியோதனன் ச~ யில் பாஞ்சாலி நடத்தியவாதம், பாரதி தமிழுக்கு அளித்த ஒரு தனிச் சிறப்பான இலக்கியக்கருத்த தும். புதுமைப் பெண்ணின் சிறப்புகளைப் பற்றி ஒரு முழுமையான சித்திரத்தை பாரதி தனது கவிதைகளில் வடிவத்திருப்பது காலத்திற்கேற்றது மட்டுமல்லாமல், எக்காலத்திற்கும் பொருந்துவதான பொது நெறியாகும். புது நெறியாகும். பெண்மை வாழ்க வென்றும் பெண்கள் விடுதலைக் கும்மியென்றும். பெண் விடுதலையென்றும் பெண்ணுரிமைகளைப் பற்றி ஒரு புதிய கொள்கையை பாரதி, பாரத நாட்டின் முழு விடுதலையின் பகுதியாக முன் வைத்துள்ளார். பெண் விடுதலை, பெண்ணின் பெருமை, பெண்ணின் மேன்மை பற்றி, பாரதி தனது கவிதைகளில் கூறியுள்ள கருத்துக்கள் பற்றி எழுதத் தொடங்கினால் அதுவே விரிவடைந்து பெரிய நூலாகிவிடும். எனினும் பாரதி நமது பண்பாட்டு தளத்தில் வேரூன்றி நின்று எவ்வாறு அதில் உள்ள சில அழுகிப் போன பழமை, பொய்மைகளை நீக்கி புது நெறியை முன் வைத்துள்ளார் என்பது நாம் கற்றறிய வேண்டியதாகும். பாரதப் பெண்மையின் முழு வடிவத்தை அனைத்துப் பரிமாணங்களிலும் பாரதி கூறியிருப்பது சிறப்பானதாகும். "செய்யாளினியாள்பூரீதேவி செந்தாமரையிற் சேர்ந்திருப்பாள் "கையாளென நின்றடியேன் செய் தொழில்கள் யாவும் கைகலந்து "செய்வாள், புகழ் சேர்வாணியும் என் உள்ளே நின்று திங்க விதை "பெய்வாள், சக்தி துணைபுரிவாள் பிள்ளாய் நின்னைப்பே சிடிலே’ என்று முப்பெரும் தெய்வங்களையும் சக்தி வடிவில் பாடுகிறாள். வேண்டுவன என்னும் தலைப்பிலான கவிதையில் மனதில் உறுதி வேண்டும் என்று தொடங்கி" "கண் திறந்திட வேண்டும் காரியத்தில் உறுதி வேண்டும் பெண் விடுதலை வேண்டும் பெரிய கடவுள் காக்க வேண்டும்" என்று பாடுகிறார்.