பக்கம்:பாரம்பரியம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அனு ரோஜாக் செடியில் ஒரு குச்சி வெட்டி அதை மண்ணிலே கட்டுத் தண்ணிர் ஊற்றினுல் அது தளிர்த் துப் புதிய செடியாய் விடுகிறது. நாளடைவில் அது பூக்க ஆரம்பிக்கிறது. தாய்ச் செடியைப் போலவே அதன் பூவும் அமைகிறது. முதற் செடியின் பூவைப் போலவே மணம், கிறம் எல்லாம். மண், உாம், தண்ணீர் இவைகள் முதற் செடிக்குக் கிடைத்ததைவிட விசேஷமாகக் கிடைக் திருந்தால் இளஞ் செடியின் பூக்கள் பெரிதாக இருக்க லாம்; அதிகமாகவும் இருக்கலாம். ஆனல் அவற்றின் இயல்பு மாறிவிடாது. இவ்வாறு ஒரு செடியிலிருந்து வெட்டி வைத்த குச்சி தனியாகத் தளிர்த்து வளர்கிறதென் ருல் அதன் இயல்பு முதற்செடியின் இயல்பைப் போலவே இருக்குமென்பதைச் சுலபமாக உணர்ந்துகொள்ளலாம். ஆனல் விதையிலிருந்து முளைக்கும் செடியானது பொது வாக எவ்வாறு காய்ச் செடியின் இயல்பையே கொண் டிருக்கிறது என்பதைத்தான் அவ்வளவு சுலபமாக அறிந்து கொள்ள முடிவதில்லை. மேலும் விதையிலிருந்து முளைக்கும் செடிகளெல்லாம் காய்ச் செடியின் இயல்பை முற்றிலும் கொண்டிருப்பதில்லை என்றும், சில செடிகள் ஒரு சில அம்சங்களில் மாறுபட்டிருக்கின்றன வென்றும் கூர்ந்து ஆாயும்போது தெரிகின்றன. சோளத்தில் பல இனங்கள் இருக்கின்றன. அவற்றில் வெவ்வேருன இரண்டு இனங்களின் மகரந்தங்கள் கலக் கும்படி செய்தார்கள். அதஞ்ல் விளைந்த புதுச் சோளத்தை மறுபடியும் விதைத்த போது உற்பத்தி அதிகமாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/26&oldid=820415" இலிருந்து மீள்விக்கப்பட்டது