பக்கம்:பாரம்பரியம்.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சில வேறுபாடுகள் 5f தழுவுகின்றன என்று முன்பே கண்டோம். அப்பொழுது சில சமயங்களில் அந்த நிறக்கோல்களின் பாகங்கள் ஒன்றி விருந்து மற்ருென்றிற்கு மாறி அமைதலும் உண்டு. அம்மாதிரி மாறி அமைந்தால் அவற்றின் உருவம் பழைய படியே இருந்தாலும் தன்மைகள் மாறுபட இடமிருக் கின்றது. மேலும் சில சமயங்களில் முதற் பிரிவின்போது ஒவ்வொரு ஜோடி நிறக்கோல்களும் இரண்டாகப் பிரிந்து இரு அணுக்களுக்குச் செல்லாமல் ஏதாவது ஒரு ஜோடி ஒரே அணுவுக்குச் சென்று விடுவதும் உண்டு. இதலுைம் மெண்டலின் விதி பாதிக்கப்படுகிறது. மெண் டலின் விதிக்குப் பாக்த ஒரு விளக்கம் கூறி அதற்குள் ளேயே இவ்வித விலக்குகளுக்கும் புறநடை காண வேண் டும் எனச் சிலர் விரும்புகிருர்கள். ஆனல் பொதுவாகப் பார்க்குமிடத்து அந்தச் சாது கண்டுபிடித்த விதி சரியான தென்றே தெரிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரம்பரியம்.pdf/62&oldid=820455" இலிருந்து மீள்விக்கப்பட்டது