பக்கம்:பாரி வேள்.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வஞ்சச் செயல் - 6?

என்ன தீங்கு நேருமோ!' என்று சான்ருேர்கள் மனம் கரைந்து உருகிப் போளுர்கள். . . . .

கபிலர் மக்களுடைய உள்ளப் போக்கை நன்ருக உணர்ந்தவர். பாணராக வந்தவர்களே இந்தப் பழிச் செயலைச் செய்திருக்கவேண்டும் என்று தெளிந்தார். அந்தப் பாணர்களை ஏவி விட்டவர்கள் பகை மன்னர் களாகவே இருக்கவேண்டும் என்றும் அவர் ஊகித்தார். தாம் அனுப்பிய பாடல்களிலே, பாணருக்கும் விறலிக் கும் பாரி எளியன் என்பதைப் பல முறை சொல்லி யிருந்தது அவர் நினைவுக்கு வந்தது. அவர் இருதயம் சுரீரென்றது. "ஐயோ! நானே உன்னைக் கொன்று விட்டேனே! என் பாட்டு உன்னைக் கொல்ல வழி காட்டிவிட்டதே! நீ விரும்பிப் பாதுகாத்த தமிழ் உன் னைக் கொன்றுவிட்டதே என்னுடைய பாட்டால் நீ இன்புற்றதைக் கண்டு மகிழ்ந்தேனே! அதே பாட்டு உன் உயிரை வாங்க வழி காட்டிவிட்டதே! நீ இயலுக் கும் இசைக்கும் கூத்துக்கும் அடிமையாக நின்றது உன் உயிரை வழங்குவதற்கா? தமிழுக்காக, இசைக் காக எதையும் நீ வழங்குவதற்காகவோ உன் உயிரை அளித்தாய்?" என்று நொந்து நொந்து புலம்பினர். உலகம் முழுவதும் அவருக்குப் பாழாகத் தோன்றியது. வருங்காலம் முழுவ தும் வெறுமையாகக் காட்சி அளித் தது. அவருக்குச் சிந்தனையே ஓடவில்லை. துயரக் கடலில் அவர் ஆழ்ந்து கிடந்தார். . * . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரி_வேள்.pdf/76&oldid=583894" இலிருந்து மீள்விக்கப்பட்டது