பக்கம்:பாரும் போரும்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 1 8 ஆஸ்திரேலியா இந்திய நாட்டைப் போல் பல மடங்கு பரப்புள்ள ஒரு பெருநிலம். ஆனல் அதில் வாழும் மக்கட் தொகை ஐம்பது இலட்சம் தான். நம் நாட்டில் சென்னை, கல்கத்தா, பம்பாய் ஆகிய மூன்று நகரங்களில் வாழும் மக்கட் தொகையும் இவ்வளவு தான். ஆஸ்திரேலியாவில் வாழும் மக்கள் ஆங்கில நாட்டிலிருந்து குடியேறியவர்கள். "அவர்கள் வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை' (White Australian Policy) 6T65rp 52(5 Gómsirs’04, யைக் கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி வெள்ளையர்களே, அதுவும் குறிப்பாக ஆங்கிலேயர் களே அந்நாட்டில் குடியுரிமை (Citizen Right) பெற முடியும். என்னே இவர்கள் கறுப்பின் பால் கொண்ட வெறுப்பு ! இக்கொடுமைகளெல்லாம் செய்பவர்க்ள் யார்? கல்வியறி வற்றவர்களா ? பண்பறியாப் பாமரரா? நாகரிகமற்ற காட்டு மிராண்டிகளா? மலைப்பகுதிகளி லும் காடுகளிலும் வாழும் பழங்குடிமக்களா? பனிப் பகுதிகளில் வாழும் எஸ்கிமோக்களா? அல்ல! நாகரிகத்தின் உச்சியிலிருந்து அறிவுரை கூறுபவர் கள்! வீரர்களையும், விஞ்ஞானிகளையும், அறிஞர் களையும், அரசியல் வாதிகளையும், கலைஞர்களையும், கவிஞர்களேயும் உலகிற்குப் பெற்றெடுத்து வழங்கி யவர்கள் என்று பெருமை பேசிக்கொள்பவர் கள்! பொதுமை உணர்ச்சியை உலகிற்குப் போதனை செய்பவர்கள்! இன்றைய உலகை அழிவுப் பாதையிலிருந்து மீட்க அரும்பாடு படுவதாக அரற்றுபவர்கள் !

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாரும்_போரும்.pdf/120&oldid=820519" இலிருந்து மீள்விக்கப்பட்டது