பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 மட்டும் வேர்ப்பீர் உழைப்பீர் என உரைக்கும் வீணர்' என்று கூறி உழைப்பாளிகட்குக் கடவுள் நம்பிக்கையை விடத் தம் தோள்வலியில் நம்பிக்கை வேண்டும் என்று கூறினர். செய்யும் தொழிலே தெய்வம் என்பதே பாவேந்தரின் கோட்பாடு. பாரதியார் சாதி வேற்றுமைகளையும் மூட நம்பிக்கை களையும் சாடினர், என்று பலரும் கூறுவர், ஆளுல் அவர் தம் பாடல்களை அலசி ஆராயின் சாதி மத பேதங்களை வேரறுக்க அவர் நினைத்தவர் அல்லர் என்பது புரியும். ஆனல் நம் பாவேந்தரோ, "இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கின் றதென்பானும் இருக்கின்ருனே மருட்டுகின்ற மதத்த லைவர் வாழ்கின்ருரே!' என்று பாடி பாரதியாரையும் விஞ்சுகின்றர். பாரதியார் தமிழைப் போற்றினர். தமிழைப்போல் இனிதான மொழியை வேறெங்கும் காணுேம் என்ருர். அதே நேரத்தில் இந்நாட்டை ஆரிய பூமி' என்ருர். ஆனல் நம் பாவேந்தரோ, - "தமிழுக்கு அமுதென்று பேர்! தமிழ் எங்கள் உயிருக்குநேர்!" என்றும், "எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு' என்றும், "தமிழைப் பழித்தவனைத் தாய் தடுத்தாலும் விடேன்' என்றும் முழங்கினர். தேசியகவி என்று புகழ்ப்பெற்ற பாரதியாருக்கு நம் பாவேந்தர் பாரதிதாசனத் தவிர வேறு சீடர்கள் கிடைத்தபாடில்லை. ஆனால், இன்று பாரதிதாசருக்குப் பின்னர் பாரதிதாசன் பரம்பரை என்று சொல்லுமளவுக்கு ஒரு பரம்பரையே வளர்ந்து வருகிறது. இது பாவேந்தர்