பக்கம்:பார்புகழும் பாவேந்தர்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1; புரட்சிக் கவிஞர் விழாப் பயன: சால்வைகன்ப்போர்த்துவது என்பது சாதாரணமானது அல்ல. கடையெழு வள்ளல்களிலே ஒரு வள்ளலான பேகன், போர்வையை போர்த்திய காரணத்தினலேயே, வள்ளல் என்கின்ற பெயரெடுத்தவன். எனவே அவர்களுக்கு இங்கே அணிக்கப்பட்ட போர்வை இப்பொழுது இந்தக் கோடை காலத்தில் இங்கே பயன்படாவிட்டாலும் எதிர்காலத்திலே நிச்சயமாகப் பயன்படும் என்ற நம்பிக்கை எனக்கும் உண்டு. அவர்களுக்கும் உண்டு, இன்று நாம் இங்கே புரட்சிக் கவிஞருடைய விழாவை நடத்துவது கடந்த காலத்தை எண்ணிப் பார்ப்பதற்கும், நிகழ்காலத்தைப் பற்றிக் கவலேப்படுவதற்கும், எதிர் காலத்தைப் பற்றி எவ்வாறு செயல்பட வேண்டும் என்று திட்டம் தீட்டுவதற்கும் என்பதை மறத்து விடக் கூடாது. என்னுடைய நண்பர் அன்பில் அவர்கள். பேசிப் பயன் என்ன? செயலிலே இறங்க வேண்டும் என்னு சொன்னுர், அவர் பேசுவதற்குத் தயார் செய்து கொண்டு வராத காரணத்தாலோ அல்லது திடீர் என்று பேச அழைத்துவிட்ட திகைப்பிலே மூழ்கிவிட்ட காரணத்தாலோ அதைச் கொன்சூரே தவிர பேசிப் பயன் என்ன? என்று அவர் கேட்ட கேள்வி ஒரு ஆதங்கத்தால் -ஒரு விரக்தியால் - இவ்வளவு காலமும் பேசிப் பேசி என்ன கண்டோம் இந்த நாட்டில் என்கின்ற வேதனேயால் வெளிப்பட்ட கருத்தே தவிர வேறல்ல. எழுத்தால் - பேச்சால் மக்களை ஒரளவு திருத்தியிருக்கிருேம் ! நாம் பேசித்தான் - கருத்துக்களே எழுத்து வடிவமாக ஆக்கித்தான், கவிதை வடிவமாக ஆக்கித்தான் உரைநடை வடிவமாக ஆக்கித்தான் இந்த நாட்டு மக்களே இந்த அளவிற்காவது தயாரித்து இருக்கிருேம் என்பதை யாரும் மறந்துவிடக் கூடாது!