பக்கம்:பாற்கடல்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

லா. ச. ராமாமிருதம்


அறுந்தால் கரணம் தப்பினால் மரணம் மாதிரி, குறுக்கே பாயும் நாடாவில் இழையறுதல் நேரலாம். நெடும் பாவில் நேரலாம். லுங்கியின் கட்டான்களின் சமன்களுக்குக் கண்ணின் கணிப்புத்தான் அளவு கவனம் சற்றுப் பிசகினால் ஏமாற்றக் காத்திருக்கும் செப்பன் வேலைகள் எத்தனையோ இடையிடையே இருக்கின்றன. இதனால், உம்மணாமூஞ்சியாகவோ, ஊமையாகவோ இருப்பார்கள் என்று நான் சொல்ல வர வில்லை. ஆனால் உஷாராய் மோனத்தின் சுருதி, தறியின் இயக்கத்தில் சார்ந்தவரைக் கவ்விக்கொண்டிருத்தல் வெளியாருக்கே தெரியும்.

மாலை வேளையில் தறியை விட்டு இறங்கி வாசலில் நிற்பார்.

உறுமல்,

அந்த அம்மா, ஒரு குட்டி மண் குடுவையில் எண்ணெயுடன் ஓடி வருவாள். வாய்க்காலைத் தாண்டி உள்ள பச்சையம்மன் கோயிலில் விளக்கிட,

நிலா வெளிச்சத்தில் நடுமுற்றத்தில் முதலியார் சாப்பிட்டுக் கொண்டேயிருப்பார். மறுபடியும் உறுமல்.

அவர் மனைவி நடுநடுங்குவாள். மெய்யாகவே உடல் வெடவெடக்கும்.

”என்ன ஆச்சு?” அவளிடம் கிசுகிசுப்பேன்.

”எள்ளுத் துவையலில் புளி கூடிப்போச்சாம்.”

முதலியார் எங்களிடம் கலகலப்பாய் இருப்பார். அவர் பேசினால் இன்று பூராக் கேட்டுக் கொண்டிருக்கலாம். வாய்விட்டுச் சிரிக்கமாட்டார். உடல் மடிமடி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/130&oldid=1533982" இலிருந்து மீள்விக்கப்பட்டது