பக்கம்:பாற்கடல்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

159


Charles Dickes-ன் நாவல்கள், London சேரிகளில் மக்களின் அவல நிலையைப் போக்கக் காரணமாக இருந்தன.

H. Beecher எழுதிய Stowe எழுதிய Uncle Tom's cabin அமெரிக்காவில் அடிமைகளின் தளையறுப்பதில் பெரும் பங்கு கொண்டது.

நம் நாட்டில் பாரதியை வைத்துக்கொண்டு எழுத்தைப் பூ பூ என்றால் என்ன அர்த்தம்? இதுதான் பாரதிக்குக் காணிக்கையா?

தலையை உள்ளே தைரியமாக இழுத்துக் கொள்கிறேன்.

ஓம் சக்தி!

எனக்குப் படுகிறது. எதன் மேலும் தீர்ப்புச் சொல்வது எழுத்தின் வேலையல்ல. எடுத்துக் காட்டி, மௌன சாட்சியாகத் தங்கி நின்று, எழுத்தாளனோ, வாசகனோ தயாரானதும் அவனை வாழ்க்கைப் பிரயாணத்தின் அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும் வழித் துணை. இராஜகுமாரனை, அவன் இன்னும் கண்டிராத, ஆனால் தேடி வந்திருக்கும் ராஜகுமாரியிடம் கூட்டிச் செல்லும் மோனத் தாதி இளவரசி அப்படி ஆள் அனுப்பியிருக்கிறாள். தாதியே இளவரசி அல்ல. தாதியின் அழகில் இளவரசியை மறந்த ராஜகுமாரன் வந்த காரியம் குலைந்தவன்.

ஏதோ ஓர் ஆத்ம வேதனை முதல் முதலாகத் தன்னைத் தீண்டாமல், தீய்க்காமல் எழுத்து (எனும் உள் எழுச்சியின் உருவம்) வெளிப்பட முடியாது. சில இடங்களில் இந்த உள் எழுச்சி - எழுத்தின் ஸ்வரூபத்தைப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/165&oldid=1534268" இலிருந்து மீள்விக்கப்பட்டது