பக்கம்:பாற்கடல்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

185


கதையின் முதுகெலும்பு. உருவகத்தில்தான் பாற்கடல். உள்ளபடி உப்புக் கடல்தான்!

விடுமுறைக்கு விடுமறை அண்ணா குண்டாக வருவார். ஹோட்டல் சாப்பாடு அவருக்கு நன்றாக ஒத்துக்கொண்டிருந்தது. அது கன்னடச் சீமை, மாதவச் சமையல், நெய் கை வழிய, பிஸிபேளா ஹுளி அன்னா, மைசூர் ரஸா, எதிலும் பருப்பு சொதச் சொதா. காய்ந்த மாடு கம்பில் விழுந்த கதைதான்.

அண்ணாவின் ஹோட்டல் வாழ்க்கை பற்றி ஒரு துணுக்கோடு நிறுத்திக்கொள்கிறேன். பானை சோற்றுக்கு - இல்லை, பருப்புக்கு ஒரு பதம்.

போன புதிதில் ரஸத்தைத் தெளிவாக விட்டுக் கொண்டு சாப்பிட்டுக் கொண்டிருந்தாராம். ரஸம் என்றால் தெளிவாய்த்தான் இருக்கும் என்கிற நினைப்புப் போலும். ஆனால் பரிமாறும்போது, தவறாமல் அலுக்காமல் Server, “தெளிவா? அடியா?” என்று கேட்பானாம். என்னடா தினமும் இப்படிக் கேட்கிறானே என்று ஒருநாள், "சரி கலக்கித்தான் விடேன்!” என்றாராம். தான் எதிர்பாராது கண்ட புது ருசியைத் தெரிவிக்கும் ரீதியில் அண்ணா எங்களுக்கு அவ்வப்போது விழித்துக் காட்டும் ஆச்சரியத்தையும், குரலில் சுருதி பேதத்தையும், எழுத்தில் கொணர இயலவில்லை.

“அன்றிலிருந்து முதலில் தெளிவு ரஸத்தில் ஒரு Course; அடுத்து கக்கலும் கரைசலுமாக வண்டல் ரஸத்தில் ஒரு Course அடிப்பேன்.“

“ஸாக்கா? பேக்கா ?” கேள்விக்குக் கன்னடம் தெரியாத வெளியூர்க்காரன். 'ஸாக்குலே கொஞ்சம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/191&oldid=1534294" இலிருந்து மீள்விக்கப்பட்டது