பக்கம்:பாற்கடல்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பாற்கடல்

187


குறைச்சல் இல்லை. தின்றால் குற்றம் இல்லை. தின்பதை எழுதினால்தான் குற்றமா?

என் ரஸனையைப் பற்றிக் கவிஞர் 'அபி' சொல்வதைக் கேளுங்கள்.

“லா.ச.ரா.வின் இயற்கை வர்ணனைகளிலும், உணவு பற்றி அவர் எழுத்தில் வெளிப்படும் இலக்கியத்தரமான விவரங்களிலும், தனித்தனியாக பி.எச்.டி. பண்ணுவதற்கே விஷயங்கள் இருக்கின்றன.“

உணவு பற்றி மேலை எழுத்தாகட்டும்; இதிகாச காலத்திலிருந்து நம் வரலாறு ஆகட்டும் - வேணது வழங்கியிருக்கிறது. அதற்கெதிரில் நான் எந்த மூலை? படித்தாலேதானே! படிக்காமலே தீர்ப்பு.

எந்த மேனாட்டுக் கதையையோ நாவலையோ எடுத்துக்கொள்ளுங்கள். ஒன்று குடி, அல்லது தீனி அல்லது இரண்டும். பக்கத்துக்குப் பக்கம் இடறி விழுந்தேயாகணும்.

Thomas Mannஇன் புகழ் பெற்ற Budden broks. முதல்அத்தியாயம், முப்பது பக்கங்களுக்கு மேல் ஜெர்மனியில் ஓர் உயர்தரக் குடும்பத்தின் சாப்பாட்டை வெகு சாவகாசமாக விவரிக்கின்றது. அதனாலேயே அந்த அத்தியாயம் தனிப் பிரசித்தி பெற்றது.

Hemingwayக்கு ஒரு பக்கத்தில் ஒரு பாராவுக்குள்ளே, ஒரு விஸ்கி & சோடா அல்லது தீனி காணாவிட்டால் மண்டை வெடித்துவிடும்.

Irving wallaceஇன் The Plot எனும் நாவல் திண்டு கனம். அதில் ஒரு பத்திரிகை நிருபன், சாப்பாட்டு ராமன். முக்கியமான பாத்திரம்; நாவலின் கடைசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாற்கடல்.pdf/193&oldid=1534296" இலிருந்து மீள்விக்கப்பட்டது