பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 151 வாசநாள் மலரோன் அன்ன மாமுனி பணி மறாத காசுலாம் கனகப் பைம்பூண் காகுத்தன் கன்னிப் போரில் கூசி வாள் அரக்கர் தங்கள் குலத்து உயிர் குடிக்க அஞ்சி ஆசையால் உழலும் கூற்றும் சுவை சிறிது அறிந்த தன்றே (53) இராமனுக்கு இது முதல் போர் ஆனதால் 'கன்னிப் போர்’ எனப்பட்டது. கூற்றுவன் சுவை சிறிது அறிந்தான் என்பதில் மற்றொரு கருத்து மறைந்துள்ளது. அதாவது, இராமன் துணையால் இன்னும் பதினாயிரக்கணக்கான அரக்கர்களின் உயிர்களைச் சுவைக்க இருக்கிறான் கூற்றுவன்-என்பதே அது. இன்னும் பல போர்கள் நேருமாதலின் இது கன்னிப் போர் ஆகும். அகலிகைப் படலம் நிழல் கயல்: ஒடு மீன் ஒட உறுமின் வருமளவும் வாடியிருக்குமாம் கொக்கினமாகிய நாரை, தண்ணிரில் தெரியும் உழத்தியின் கண்களின் நிழலைக் கயல்கள் என்றெண்ணிக் கொத்த, ஒன்றும் இல்லாமையால் வெட்கியதாம். அத்தகைய நீர்வளம் மிக்க மிதிலை நாட்டை மூவரும் அடைந்தனர். இந்த நயமான கற்பனையுள்ள பாடலாவது:. 'பள்ளி நீங்கிய பங்கயப் பழனி நல் நாரை வெள்ள வான்களை களைவுறும் கடைசியர் மிளிர்ந்த கள்ளவாள் நெடுங்கண் கிழல் கயல் எனக் கருதா அள்ளி நாணுறும் அகன்பனை மிதிலை நாடு அணைந்தார்' (6) ஆடல் காட்சி. ஆங்குள்ள ஒரு சோலையில் பின்வருமாறு ஆடல் காட்சி ஒன்று நேர்ந்தது. மதகுகளிலிருந்து நீர் விழும் ஒலி