பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பைம் பொழில் 213 கருவிகள் அளித்தார்களாம். அதனால் சனகன் மிக்க வலிமை உடையவன் ஆனான். இதன் பிறகு, இரவில் காக்கை கூகையைக் (கோட்டானைக்) கண்டு அஞ்சுவது போல் பகைவர்கள் சனகனுக்கு அஞ்சத் தொடங்கினர். 'மல்காக்கும் மணிப்புயத்து மன்னன் இவன் மழ விடையோன் வில்காக்கும் வாள் அமருள் மெலிகினறான் - என இரங்கி எல்காக்கும் முடிவிண்ணோர் படை ஈந்தார் என வேந்தர் அல்காக்கை கூகையைக் கண்டு அஞ்சினவாம் என அகன்றார்' (23) பகலில் காக்கை கூகையை வெல்லும்; இரவில் கூகை காக்கையை வெல்லும். படை குறைந்தபோது சனகன் பகல் கூகையைப் போல் இருந்தானாம்; படை பெருகியதும் இரவுக் கூகையைப் போல் ஆய்விட்டானாம். சனகனுக்குப் படை குறைந்தபோது, பகைவர்கள் பகல் காக்கையைப் போல் இருந்தார்களாம்.-படை பெருகியதும் இரவுக் காக்கைபோல் ஆனார்களாம். ஈண்டு,

  • பகல்வெல்லும் கூகையைக் காக்கை: இகல்வெல்லும்

வேங்தர்க்கு வேண்டும் பொழுது’’’ (48) என்னும் குறள் எண்ணத் தக்கது. முகிலும் வறியவரும். சனகனது வில்லை இராமன் ஒடித்ததும், மகிழ்ச்சியி னால் மன்னன் வறியவருக்கு வரையாது வழங்கினான். அதாவது-வெள்ளை முகில் மேன்மேலும் கடல் நீரைப் பருகுவதுபோல் இரவலர் பெற்றனர்.

  • வெண்ணிற மேகம் மேன்மேல் விரிகடல் பருகுமாபோல்

மண்ணுறு வேந்தன் செல்வம் வறியவர் முகந்து கொண்டார்' (39) լյT-14