பக்கம்:பாலகாண்டப் பைம்பொழில்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 பால காண்டப் முடியாத அன்னம் பழி தீர்க்க எண்ணியதாம். பெண்களை ஒன்றும் செய்ய முடியாமையால், அவர்களின் காலடிகள் போன்றிருக்கிற தாமரை மலர்களின் மேல் ஏறி நடந்து சிதைத்தனவாம்:

சுளியும் மென்னடை தோற்க நடந்தவர்

ஒளிகொள் சீறடி ஒத்தன ஆமென விளிவு தோன்ற மிதிப்பன போன்றன நளினம் ஏறிய நாகு இள அன்னமே' (26) நளினம் = தாமரை. பகைவர் தம்மினும் வலியவராயின், அவர்களைச் சேர்ந்தவர்க்காவது துன்பம் விளைவிப்பது சிலரது இயல்பு. அரசில் புரட்சி செய்பவர்கள், அரசுத் தலைவரோடு அவரைச் சேர்ந்தவர்களையும் சிறை வைப்பது ஈண்டு ஒப்பு நோக்கத் தக்கது. தாமரை மலர் மேல் இயற்கையாக அன்னம் நடக்க, அதற்கு ஒரு காரணம் கற்பித்திருப்பது தற்குறிப் பேற்றம். ஞாயிற்றின் காதல்: பெண்டிரும் ஆடவரும் நீர் விளையாடியதை நோக்கிய ஞாயிறு, தானும் நீராட விரும்பியவன் போல் மேலைக் கடலில் மூழ்கினான். "மானின் நோக்கியர் மைந்தரொடு ஆடிய ஆனநீர்விளை யாடலை நோக்கினான் தானும் அன்னது காதலித்தான் என மீன வேலையை வெய்யவன் எய்தினான்' (32) மானின் நோக்கியர்=பெண்கள். மைந்தர் = ஆண்கள். இயற்கையாகக் கடலில் மூழ்கிய ஞாயிற்றின் செயலுக்கு ஒரு காரணம் குறித்து ஏற்றியதால் இது தற்குறிப்பேற்றம் .