உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலபோதினி.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

[சொல்லதிகாரம்


வாக்கியமாக மாட்டாது. மற்றவுறுப்புக்கள் வேண்டியபோது வரலாம். சிலசமயங்களில் எழுவாய் தொக்கியும் வரும்.

3. எழுவாய்.- எழுவாயாவது (எழும் + வாய்; வாய் = இடம்) வாக்கியத்தின் முதற்பொருள் எழும் இடம்.

4.பயனிலை.- பயனிலையாவது (பயன் + நிலை = பயன் நிற்குமிடம்) முதற்பொருளின் செயல்முடிந்து நிற்குமிடம்.

5. செயப்படுபொருள்.-செயப்படு பொருளாவது (செயலைப் படும்பொருள்; தொழில்) முதற்பொருளினது செயலைக்கொள்ளும் பொருள்

6. இடைப்பிறவரல்.-உருபு,முற்று, எச்சம் ஆகிய இவைகட்கும் இவை கொள்ளும் சொற்களாகிய பெயர் வினைகட்கும் இடையில் அவ்விடத்திற்குப் பொருந்துவனவாக வரும் பிறசொற்கள் இடைப்பிறவரலெனப்படும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/29&oldid=1533930" இலிருந்து மீள்விக்கப்பட்டது