இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
40
[எழுத்ததிகாரம்
மேல் இருக்கும் குற்றியலுகரம் ஆ என்னும் நெட்டெழுத்தால்
தொடரப்பட்டிருக்கின்றமையால் நெடிற்றொடர். தனி நெடிலைச் சார்ந்து வரும் குற்றியலுகரம் மட்டும் நெடிற்றொடர் எனப்படும். அரசு: இதிலுள்ள குற்றியலுகரம் ரகர மெய்யின் மேலுள்ள அகரவுயிராற் றொடரப்பட்டிருப்பதால் உயிர்த்தொடர்.
பலாசு: இதுவும் உயிர்த்தொடர்; ஏன்?
சுக்கு, நெஞ்சு, சால்பு, அஃது, இவை முறையே வலி, மெலி, இடை, ஆய்தங்களாற் றொடரப்பட்டிருப்பதால் முறையே வன்றொடர், மென்றொடர், இடைத்தொடர், ஆய்தத்தொடர் எனப்படும்.
13. குற்றியலிகரம்.- குற்றியலுகரங்கள் யகர மெய்யை முதலாக வுடையமொழிகளுடன் புணரும்போது இகரங்களாகத் திரியும். அவ்விகரங்களு-