இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
42
[எழுத்ததிகாரம்
அஃறிணை:
இதில் குற்றுயிர்க்கும் இ என்னும் உயிரோடு கூடிய வல்லினத்துக்கும் இடையே வந்திருக்கின்றது. இதையே (இவ்வாறு ல, ள, என்ற எழுத்துக்கள் திரிந்தாகின்ற ஆய்தத்தை) ஆய்தக்குறுக்கம் என்று சொல்லுவார்கள்.
15. மாத்திரையின் அளவு- கைநொடித்தலில் அல்லது கண் இமைத்தலில் செல்லுங் காலஅளவே ஓர் மாத்திரைக்கு அளவு ஆகும்.
16. எழுத்துக்களின் மாத்திரை - உயிரெழுத்துக்களுள் குற்றுயிர்கள் ஓர் மாத்திரையளவு ஒலிக்கும். நெட்டுயிர்கள் இரண்டு மாத்திரை யளவு ஒலிக்கும். மெய்எழுத்துக்கள் அரை மாத்திரையளவு ஒலிக்கும்.
குற்றியலுகரம், குற்றியலிகரம், ஆய்தம் இவைகளும் அரை மாத்திரை யளவு ஒலிக்கும் எழுத்துக்களாம். ஆய்-