இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
44
[எழுத்ததிகாரம்
வகரம்: அ, ஆ, இ, ஈ, எ, ஏ, ஐ, ஔ என்ற எட்டுயிரோடு மட்டும் கூடி
மொழிக்கு முதலில் வரும்.
உ-ம். வயல்,வாழை, விளி, வீதி, வெளி, வேலை, வைகல்,வெளவு.
யகரம்: அ, ஆ, உ, ஊ, ஓ, ஒள என்றவற்றோடுமட்டும் கூடி முதலில் வரும்.
உ-ம். யவனர், யானை, யுகம், யூகம், யோகம், யௌவனம்.
ஞகரம்: அ, ஆ, இ, எ, ஒ என்றவற்றோடுமட்டும் கூடி மொழிக்கு முதலில் வரும்.
உ - ம். ஞமலி, ஞாயிறு, ஞிமிறு, ஞெண்டு, ஞொள்கிற்று.
19. ஈற்றுநிலை.- எகரம் நீங்கிய பதினோருயிரும் ஞ, ண, ந, ம, ன, ய, ர, ல, வ, ழ, ள என்ற பதினொரு மெய்யும் குற்றியலுகரமும் வார்த்தையின் கடைசியில் வரும்.