இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
பதவியல்]
51
எழுத்துப்பதம்; பலம்: இது தொடர் மொழி.
2. பகாப்பதம்.- பிரித்தால் அர்த்தமில்லாமலிருக்கின்ற பதம் பகாப்பதம். பெயர், வினை, இடை, உரி என்ற நான்கு சொல்லும் பகாப்பதமாக வரலாம்.
3. பகுபதம் - பிரித்தால் அர்த்தமுள்ள பெயரும் வினையும் பகுபதமாம்.
எச்சொற்கள் பகுபதமாக வரா?
4. பகுபத உறுப்புக்கள்.-பகுபத உறுப்புக்கள் பகுதி, விகுதி, இடைநிலை, சாரியை, சந்தி, விகாரம் என்று அறுவகைப்படும்.
5. பகுதி.- ஒவ்வொரு பகுபதங்களிலும் முதலிலே நிற்கும் பகுக்கக்கூடாத பதங்களே பகுதியாம்.
a.பெயர்ப்பகுதி -பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் என்ற