பக்கம்:பாலபோதினி.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

82

[எழுத்ததிகாரம்

b. ய், ர், ழ், முன் மற்ற எழுத்துக்கள் வந்தால் இயல்பாகும்.

மற்ற எழுத்துக்கள் எவை?

41. a. ல், ள் என்பவைகளுக்குப்பின் வல்லினம் வந்தால் வேற்றுமை வழியில் அவை முறையே ற், ட் என்பவைகளாகத்திரியும் அல்வழியில் திரியாமலும் இருக்கும்.

உ - ம். கற்றீமை, முட்டீமை. வேற்றுமையில் ற டக்களாகத் திரிந்தன.

கல்பெரிது கற்பெரிது = அல்வழியில் இயல் பாயும் திரிந்தும் வந்தன.

b. லகர ளகரங்கள் தனிக்குறிலைச் சேராதிருந்தால் வருமொழியில் வருகின்ற கரம் திரிந்தபோது கெடும்.

வேல் + தீது - வேறீது, நாள் + தீது - நாடீது

தனிக்குறிச்சார்ந்த ல, ளக்கள் வருமொழியில் கரம் வந்தால் ஆய்தமாகம்திரியும்.

உ-ம். அல்+திணை - அஃறிணை, முள்+தீது - முஃடீது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலபோதினி.pdf/83&oldid=1471021" இலிருந்து மீள்விக்கப்பட்டது