பக்கம்:பாலபோத இலக்கணம்-1.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 பால போத இலக்கணம்.

5

112-ழற்றுத் தொடர் மொழிக்கு வேறு என்ன பெயர்:

வாக்கியம் என்பது.

118.-ஒரு வாக்கியம் முற்றுப்பெறுவதற்கு என்னென்ன உறுப்

புக்கள் இருக்கவேண்டும்? 1. எழுவாய், (செய்பவன்) 2. பயனிலை, (அவன் செய்யும் தொழில்) 3. செயப்படு பொருள் (அந்தத் தொழிலை அடையும்பொருள்) என்னும் மூன்று உறுப்புக்கள் இருக்கவேண்டும்.

114-எழுவாய் என்பது என்ன?

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முதன்மை யாய் இருப்பவன்; அல்லது முதன்மையாய் இருப்பது எழுவாயாம். எழு-(வாக்கியம்) உண் டாவதற்கு, வாய்-மூலமான இடம் எழு. வாய்=எழுவாய். இது முதல் எனவும் கருத்தா எனவும் பெயர் பெறும்.

115.-பயனிலை என்று ல் என்ன?

எழுவாய் (கருத்தா) செய்யும் காரியத்தின் பயனைக் குறிப்பது பயனிலையாம். பயன்-பிர யோஜனம்; நிலை - நிற்கும் இடம். இது பொ ருள் நிலை எனவும் பெயர் பெறும், 116-செயப்படுபொருள் என்றல் என்ன?

எழுவாய் செய்யும் செய்கையை (பயனிலை யை) அடைகிற பொருள் செயப்படுபொருளாம்.