பால்பர் அறிக்கை
15
மட்டுமல்ல, சென்ற இரண்டு நூற்றாண்டுகளாக இருந்து வந்திருக்கிறது என்பதை மட்டும் தெரிந்து கொண்டால் போதுமானது. இந்த விஷயத்தை நாம் மனத்தில் வைத்துக் கொண்டு, ஐரோப்பிய மகாயுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பாலஸ்தீன விஷயமாக யூதர்கள் கொண்டிருந்த அபிலாஷைகளை ஆதரித்து, பிரிட்டிஷ் ராஜதந்திரிகள் வெளியிட்ட அறிக்கைகளைப் படித்தால், அதில் ஆச்சரியம் ஒன்றும் நமக்கு ஏற்படாது.
ஐரோப்பிய யுத்தத்தின் போது, உலகத்தின் பல பாகங்களிலும் சிதறிக் கிடந்த—ஆனால், செல்வாக்கு நிறைந்த—யூதர்களின் ஆதரவும், ஒத்துழைப்பும் நேசக் கட்சியினருக்கு—சிறப்பாக பிரிட்டிஷாருக்கு—தேவையா யிருந்தது.அப்பொழுது, அமெரிக்காவின் துணையை நேசக் கட்சியினர் தேடிக் கொண்டிருந்தனர். அமெரிக்காவிலோ, யூதர்களின் எண்ணிக்கையும், செல்வாக்கும் அதிகம். எனவே, யூதர்களின் அநுதாபம், நேசக் கட்சியினருக்கு அப்பொழுது அவசியமாயிருந்தது.
இன்னொரு விஷயம். ஐரோப்பிய யுத்தம் நடைபெற்றுக் கொண்டிருக்கையில், பிரிட்டிஷாருடைய யுத்த தளவாடங்களில், ஒரு வித பலக் குறைவு ஏற்பட்டிருந்தது. அதாவது, சத்துருக்களின் கப்பல்களை உடைத்தெறிவதற்காக, வெடி குண்டுகள் உபயோகிக்கப் பட்டனவல்லவா? இந்த வெடி குண்டுகளில் சேர்க்கப்பட்டு வந்த முக்கியமான ரஸாயனப் பொருள் ஒன்று குறைந்து விட்டது. இந்தப் பொரு-