உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பாலஸ்தீனம்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அராபியர்களின்‌ தேசீய இயக்கம்‌

27

கட்சியினராகத் தங்களை வகுத்துக் கொண்டு, அந்தக் கட்சிக் கொள்கைக்காக, இயக்கத்தை நடத்துவதென்பதோ, கிளர்ச்சி செய்வதென்பதோ இவர்களுக்குத் தெரியாது. கட்சி அபிமான மென்பதை இவர்கள் அறிய மாட்டார்கள். எஜமான விசுவாசம் ஒன்றுதான் இவர்களுக்குத் தெரியும்.ஆனால், அந்த எஜமான விசுவாசமானது, தேச நலன் ஒன்றனையே குறிக்கோளாகக் கொண்டிருக்கும். இதனால் ஏழைகள், பணக்காரர்கள் என்ற வேற்றுமையின்றி, கிராம வாசிகள், நகர வாசிகள் என்ற வித்தியாசமில்லாமல், எல்லாரிடத்திலும் தேசீய உணர்ச்சியானது வலுத்து நிற்கிறது. இல்லா விட்டால், சென்ற 1936ம் வருஷத்திலிருந்து, பிரிட்டிஷ் படைகளுடன் இடை விடாத போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்குமா? 1929ம் வருஷம் பாலஸ்தீனத்தைச் சுற்றிப் பார்த்த ஒரு பிரிட்டிஷ் கமிஷன்[1], அறிக்கையில் பின் வருமாறு கூறுகிறது:-

அராபிய விவசாயிகள், அரசியலில் நேர்முகமான சிரத்தை கொள்வதில்லையென்று சொல்லப் படுவதற்கு, எங்களுடைய அநுபவத்தில் எவ்வித ஆதாரமும் காணப்படவில்லை. நாங்கள் கிராமங்களில் சுற்றுப் பிரயாணஞ் செய்த போது, எங்களை ஆரவாரத்துடன் வரவேற்று, எங்களுக்கு உபசாரப் பத்திரம் படித்துக் கொடுத்தார்கள். இந்த உபசாரப் பத்திரங்களைப் படித்-

  1. Shaw Commission.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலஸ்தீனம்.pdf/37&oldid=1671587" இலிருந்து மீள்விக்கப்பட்டது