கலகங்கள்
57
பொதுவாகவே, இந்தச் சிறிய கமிட்டிகளுக்குத்தான் அதிகமான செல்வாக்கு இருந்தது.
பொது ஜனங்களுடைய உற்சாகத்தினாலும், கட்டுப்பாட்டினாலுமே அராபிய தேசீய இயக்கம் முறுக்கேறி நிற்கிறதென்பதற்கு ஒரு சிறிய உதாரணம்: 1936ம் வருஷம் மே மாதம் வரி கொடா இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்த இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டுமென்று தலைவர்கள் யோசனை கூறவில்லை. வாடகைக்கு மோட்டார் ஓட்டும் அராபியர்களின் கமிட்டிதான் இந்த யோசனையைக் கூறியது. பிறகே அனைவராலும் இஃது அங்கீகரிக்கப்பட்டது.
சிறிய கமிட்டிகளின் ஏற்பாட்டின்படியும், ஒழுங்கான வேலைத் திட்டப்படியும், பாலஸ்தீனத்தின் பல பாகங்களிலும், சுமார் ஆறுமாத காலம் வரை வேலை நிறுத்தங்கள் நடைபெற்று வந்தன. ஒத்துழையா இயக்கம் தீவிரமாகப் பரவி நின்றது. ஆனால், சிறிது காலத்திற்குப் பிறகு, பலாத்காரம் தோன்றி விட்டது. நகரங்களில் வெடிகுண்டு எறிவதும், துப்பாக்கிப் பிரயோகமும் தினசரி சம்பவங்களாகி விட்டன. கிராமங்களில், போக்குவரவு சாதனங்களாகிய பாலங்கள் உடைக்கப்பட்டன; தந்திக் கம்பிகள் அறுக்கப்பட்டன; ரெயில் தண்டவாளங்கள் பெயர்க்கப்பட்டன. யூதர்கள் வசித்த நகரங்கள் அடிக்கடி தாக்கப்பட்டு, பல சேதங்கள் விளைவிக்கப்பட்டன. கலகக்காரர்களின் செய்கையினால், அநேக இடங்களில் மரங்கள் சாய்ந்து வீழ்ந்தன. மகசூல் செய்யப்பட்டு நிலங்களில் குவிந்திருந்த விளை பொருள்கள், நெருப்பி-