பக்கம்:பாலும் பாவையும்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்ற வருடம் சென்னை கந்தசாமி கோயில் பக்கம் போயிருந்தால் நீங்கள் கனகலிங்கத்தைப் பார்த்திருக்கலாம் அவன் அங்கே ஒரு புத்தகக் கடையில் வேலை செய்து கொண்டிருந்தான். வேலையென்றால் சாதாரண வேலையல்ல; அவன்தான் அந்தக் கடைக்கு நிர்வாகி, குமாஸ்தா, விற்பனையாளன், இலக்கிய ஆலோசகன், பையன் எல்லாம்!-இத்தனை வேலைகளுக்கிடையிலும் அவனுக்கு ஒரு திருப்தி இருந்தது. அந்தத் திருப்தி, தான் விரும்பிய புத்தகத்தை அங்கே இனாமாகப் படிக்க முடிகிறது என்பதே! கனகலிங்கத்தின் உள்ளம் வெள்ளைதான். ஆனால் உடலின் நிறம் கறுப்பு. அளவுக்கு மீறிய உயரம்; ஆனால் ஆஜானுபாகு அல்ல அவனை அழகன் என்று சொல்ல முடியாது. ஆனால் அவலட்சணம் என்றும் சொல்வதற்கில்லை. காற்றுப் புகாத துருத்தியைப்போல அவன் உடம்பு எப்பொழுது பார்த்தாலும் எலும்பும் தோலுமாக இருக்கும் பார்த்தவுடனே, அவன் வார் க்வாலிட்டி' என்று சொல்லிவிடலாம். அடியில் ஒரு நாலு முழ வேஷடி. மேலே ஒரு ஜிப்பா-இரண்டும் வெகு நாட்களாகச் சலவைத் தொழிலாளியின் முகத்தைக் காணாதவை போலிருக்கும் வயதுக்கு ஏற்றாற்போல் அவனுக்கு அமைந்திருந்தது ஒன்றே ஒன்றுதான்அதுதான் சம்பளம். அவனுக்கு வயதும் முப்பது சம்பளமும் ருபாய் முப்பது ஆனால், வயதைக் கணக்கிட்டு அவனுடைய முதலாளி அவனுக்குச் சம்பளம் கொடுக்கவில்லை என்பதை இங்கே நான் சொல்லிவிடத்தான் வேண்டும். தாய் தந்தையற்ற கனகலிங்கம் அன்றுவரை கல்யாணம் செய்துகொள்ளவில்லை. அதைப்பற்றி அவன் அவ்வளவாகக் கவலைப்படவும் இல்லை. மேலும், கல்யாணமென்றால் சும்மாவா?அதற்கு முன்னாலும் செலவு: பின்னாலும் செலவு தன் செலவுக்கே