பக்கம்:பாலும் பாவையும்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னையில் மதுவிலக்கு அமுலுக்கு வந்த பிறகு ஆங்கில மருந்துக் கடைகளில் வியாபாரம் மும்முரமாக நடக்க ஆரம்பித்தது. ஏனெனில், மதுவரக்கன் பல பெயர்களுடன் அவதாரம் எடுத்து அங்கே வந்து சேர்ந்திருந்தான். இதன் காரணமாகப் பலர் மதுக் கடைகளுக்குப் பதிலாக மருந்துக் கடைகளை அங்கங்கே திறந்து வ்ைத்தனர். அவற்றில் ஒன்றில்தான் கனகலிங்கத்துக்கு வேலை கிடைத்தது. மாதம் அறுபது ரூபாய் சம்பளம். - வேலையைக் காலையில் ஏற்றுக் கொள்ளும் போது கனகலிங்கம் உற்சாகமாய்த்தான் இருந்தான். ஆனால் அந்த உற்சாகம் அன்று மாலை வரைகூட நீடிக்கவில்லை. மறுநாள் காலை, “ஏண்டா நீ வேலைக்கு வரவில்லையா?” என்றுகேட்டுக் கொண்டே வழக்கம் போல் அவன் அறைக்கு வந்தான் ராதாமணி. “இல்லை” என்றான் அவன். 'ஏன்?" “எனக் கு அந்த வேலை பிடிக்கவில்லை.” “இது என்ன கூத்து ஏன் பிடிக்கவில்லை?” என்று கேட்டுக்கொண்டே, அவன் தோளைக் குலுக்கினான் ராதாமணி. "அங்கே மருந்தா விற்கச் சொல்கிறார்கள்?-மது வல்லவா விற்கச் சொல்கிறார்கள்?” “எதை விற்கச் சொன்னால் என்ன?-உனக்கு மாதம் பிறந்தால் சுளை சுளையாக அறுபது ரூபாய் கிடைக்குமோ, இல்லையோ?- புத்தகக் கடையில் மாதம் முப்பது ரூபாய்க்கு “லாட்டரி அடித்துக் கொண்டிருந்ததைவிட இது எவ்வளவோ மேலல்லவா?” இ 。*醬 ణాతీత్ల అతడిక్ త్సితీ తీఱుతీ ఇఅ55: ங்கே அது இலலை.