பக்கம்:பாலும் பாவையும்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

43 வழங்குவதுபோல அவள் நீட்டிய கையில் ஒரு ரூபாயை எடுத்துப் போட்டுவிட்டுக் குளிக்கும் அறையை நோக்கி நடந்தான் அவன். “இது பலனை எதிர்பாராமல் செய்யும் கருமமாக்கும்?” என்றாள் அகல்யா. கனக லிங்கம் திரும்பி, "ஆமாம்; ஆனால் இதே கருமத்தைச் சிலர் செத்துப் போனவர்களுக்காகச் செய்கிறார்கள்: நான் உயிரோடிருப்பவர்களுக்காகச் செய்கிறேன்-அவ்வளவுதான் வித்தியாசம்!” "அந்தக் கருமத்தைச் சொல்லவில்லை நான். என்று ஏதோ சொல்ல வந்தாள் அவள். * "நீ சொல்லும் கருமமும் நான் சொல்லும் கருமமும் ஏறக்குறைய ஒன்றுதான்!” என்று சொல்லி விட்டுப் போனான் அவன். 求 冰 岑 சிறிது நேரத்துக்குப் பிறகு அகல்யா தன்னுடைய காலைக் கடன்களையெல்லாம் முடித்துக்கொண்டு வந்து பார்த்தபோது, கனகலிங்கத்தின் அறை பூட்டப்பட்டிருக்கிறது. எங்கேயோ வெளியே போயிருக்கிறார் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டே அகல்யா தன் அறையின் கதவைத் திறந்தாள். உள்ளேயிருந்த மேஜையின் மீது ஐந்து புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதன் மேல் ஒரு சீட்டும் இருந்தது. அந்தச் சீட்டில், 'பொழுதை வீணாகப் போக்காதே; அப்படிப் போக்குவதாயிருந்தால் எந்தச் சமயத்திலும் உன்னை கைவிடாத நண்பர்களான புத்தகங்களைப் படிப்பதில் போக்கு” என்று எழுதியிருந்தது. "எல்லாம் அவருடைய வேலைதான்!” என்று குறுநகை பூத்துக்கொண்டே அவற்றில் ஒன்றை எடுத்துப் படிக்க ஆரம்பித்தாள் அகல்யா.