பக்கம்:பாலைக்கலி.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12 . கலித்தொகை மூலமும் உரையும் பொழுது இடைப்பட நீப்பின், வாழ்வாளோ? ஒழிக இனி, பெரும! நின் பொருட் பிணிச் செலவே. 25 வலிமை மிகுந்த கட்டான உடலினர்; கருத்துச் சுருண்ட மயிரினர்; கொடும் புலியின் பார்வை போன்று பிறர்பால் அச்சம் விளைக்கப் பார்ப்பவர்; கொடுமையே உருவானவர்; பாலை நிலத்து மறவர்கள். அவர்கள், தம் கையிலே வில்லேந்தியவராக, அவ்வழியே வருபவரைக் கொள்ளையிடும் வாய்ப்பை எதிர்நோக்கிக் காத்திருப்பர். அவர், இரக்கம் சற்றேனும் இல்லாதவர்; வழியே வருபவரிடம் தாம் கொள்ளையிடக்கூடிய பொருள் ஏதும் இல்லாதிருந்தாற்கூட, அவர்களையும் விட்டுவிடுவதில்லை. நடுங்கித் தளர்வாரைக் கண்டும் மனம் இளகுவதில்லை. எதிர்ப்பட்டோர் எவராயினும், தொடர்ந்து சென்று கொன்று வீழ்த்தும் கொடிய இயல்பினர்! அக் கொடுமைக்குப் பறவையினங்கள் கூட நடுங்கி அவ்வழியே வருவதில்லை. நீ செல்ல நினைக்கின்றாயே அந்தப் பாலை நிலத்து நெடுவழி, அத்தகைய வெப்பக் கொடுமையினை உடையது. வலக்கையிலே ஒளி வீசும் வேலினை ஏந்தியவனாக, ஆண்மையுடன் அவ்வழியே சென்று பொருள் தேடிவர எண்ணுகின்றாய். எப்படியோ, என் தோழியும் இதை அறிந்துவிட்டாள். இனி அவள் நிலைதான் என்னவாகுமோ? "பல அணிகலன் பூண்டவள் நான்; அவைகளுடன் முத்தாரமும் என் கழுத்திலே கிடந்து புரளும், அது என் இளைய முலைகளை வருடியவாறு அசைந்து கொண்டு மிருக்கும். அத்தகைய என் மார்பைச் சிறிதுநேரமும் இடையீடின்றி இறுகத் தழுவியும் அவர் ஆசை தீர்ந்தாரில்லை. அடுத்து என் நீண்ட கூந்தலையும் புனைய முனைந்தனர். அவர் எண்ணம் எதுவோ நான் அறியேனடி?” “முள் முனையின் கூர்மையும் முளையின் வடிவும் கொண்ட என் பற்களிடையிலே, அமிழ்தாக வாயூறல் ஊறும். அதனைக் 'கள்ளினும் இன்பந் தருவதாயிற்றே என உரைத்து உண்டும் அவர் அடங்கினாரல்லர். கலைந்திருந்த என் அணிகலன்களை அடுத்துத் திருத்தவுந் தொடங்கினார். அவர் என்னதான் எண்ணி அவ்வாறு செய்தாரோ? நான் அதனை அறியேனடி!" “என் மார்பிலே தேமல் படர்ந்திருக்கும். நுண்ணிதாக, அழகாக, மாமை நிறத்துடன் அது விளங்கும். அத்தகைய என் மார்பை, வைத்தகண் வாங்காதவராக அவர் பார்த்துக் கொண்டே மகிழ்ந்திருந்தார். அவர் கண்ணுக்கு நேராக அசையாது வைத்துக்கட்டியது போன்று, ஒரே நிலையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/20&oldid=822010" இலிருந்து மீள்விக்கப்பட்டது