பக்கம்:பாலைக்கலி.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 கலித்தொகை மூலமும் உரையும் "இன்பமாகத் துக்கம் வருகின்ற மென்மையான அணைகளைப் போன்றன, அழகுடன், மூங்கில் போன்று பருத்த நினது மென்மையான தோள்கள். எழில்மிகுந்த கருநீல மலரின் எழுச்சிமிக்க அழகோடு, மலர் போன்ற மை தீட்டிய நின் கண்கள் இரண்டும் இணையாக அழகுடன் விளங்குகின்றன. மணமுடைய முல்லைமொட்டுப் போன்ற நின் வெண்மையான ஒழுங்கான பல் வரிசைகளிலேயும் வண்டுகள் மொய்க்கின்றனவே! நின் நறுநுதலினும் மணம் வீசுகின்றதே! கார்மேகம் போல நின் கூந்தலும் அடர்ந்து விளங்குகின்றதே! மார்பிலே பெருத்த முலைகள்; அகன்ற அல்குல் தடம்: அணிந்துள்ளன. சிலவேனும் ஒளி நிரைத்த வெண்மையான வளையல்கள்! திருமகள் போன்றவளேதான் நீ!’ என்றெல்லாம் பல பல புனைந்துரை களால் பண்டைநாளிலே நீயும் பாராட்டினாய். இனிமையாக அவ்வாறு பாராட்டிப்பேசிவிட்டு, இப்போது துன்பந்தருமாறும் பேசுகின்றாய். எங்களிடம் உள்ள வெறுப்பினால்தான் உன் பேச்சு மாறுகிறது என்பதை, இப்போதுதான் அறிந்து கொண்டேன். 'பொருள் உடையவனாக வேண்டும்; அஃதல்லது உண்மையான செல்வமும் வேறு உண்டோ? என்ற அறியாமை மயக்கம் நிறைந்த எண்ணம் உன்னையும் பிடித்து மயக்க, அதற்குள் அகப்பட்டு, நீயும் நின் உறுதியிலிருந்து தளர்ந்துவிட்டாயோ? கையிலே பொருள் இல்லாதவர்க்குக் காதல் உடையார் தான் என்ன நன்மை செய்யப் போகின்றனர்?’ என்று போக்கற்றவர்கள் கூறும் சொற்களைக் கேட்டு, அதை ஒரு பொருளாக மதித்து, நின் மனம் மாறிவிட்டாயோ? 'செம்மையான வழிகளிலிருந்து மாறுபட்டுச் சென்று பொருள் தேடுவார்க்கு, அப்பொருள் இம்மையும் மறுமையும் அவர்க்குப் பகையாக விளங்கும் என்ற உறுதிமொழியை நீயும் அறிந்ததில்லையோ? ஆகவே, எம்மையும் ஒரு பொருளாக மதிப்பாயாக நமக்குள் நாம், ஒருவரை ஒருவர் கைவிடச் செய்யும், பொருளின் மீதுள்ள அவாவைக் கைவிடுவாயாக, அதனைக் கைவிட்டுத்தலைவியுடன் பிரியாமல் கூடியிருப்பதே நிலையான உண்மைச் செல்வம் என்றும் அறிவாயாக' விளக்கம்: தொடர்பில்லாதவர் பேச்சைக் கேட்டோ, அறியாமையாலோ இவ்வாறு பேசுகிறாய். செம்மையிலிருந்து நீங்கிப் பொருள் தேடுவது ஏன்? முன் சொன்னதெல்லாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/44&oldid=822036" இலிருந்து மீள்விக்கப்பட்டது