பக்கம்:பாலைக்கலி.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 - கலித்தொகை மூலமும் உரையும் 8. பூ நெய்தல் பூ, தாழம் பூ, மூண்டகப் பூ, அடம்பம் பூ (கைதையும் நெய்தலும் - தொல் உரை). 9. மரம் கண்டல், புன்னை, ஞாழல். 10. உணவு மீனும் உப்பும் விற்றுப் பெற்ற பொருள்கள். 11. பறை மீன் கோட்பறை, நாவாய்ப் பம்பை. 12. யாழ் விளரி யாழ். 13. பண் செவ்வழிப்பண். 14. தொழில் மீன் பிடித்தல், உப்புண்டாக்கல், அவை விற்றல், மீன் உணக்கல், அவற்றை உண்ணவரும் பறவைகளை ஒட்டுதல், கடலாடுதல் இக் கருப்பொருள்களும், அவ்வத் திணைக்குரிய சிறந்த பொருள்கள் என்று மட்டுமே கருதவேண்டும். இவையன்றிப் பிறவும் உளவென்பதும், அவையும் இலக்கியங்களுள் பயின்று வருதலும் உண்டென்பதும் நினைக்க வேண்டும். இனி, இந்நிலத்து மாந்தரும், தத்தம் வாழ்வைக் கருதியும், மற்றும் களிப்பைக் கருதியும், பிறபிற நிலத்து வாழ்பவருடன் சென்று கலந்து உறவாடுதலும், அவர்தம் இயல்புகளைத் தாமும் ஏற்று வாழ்தலும் நிகழக் கூடியனவே. இவற்றை எல்லாம் திணை மயக்கம்’ என்பர். குறிஞ்சி நிலக் காதலன் தன் காதலிக்குத் தாமரைப் பூவைத் தந்தான் என்று வரின், அது திணை மயக்கம்: மருதத்திற்கு உரியது குறிஞ்சித் திணைச் செய்யுளில் மயங்கி வந்தது. முல்லைக்கும் மருதத்துக்கும் உரியோர் முருகனை வழிபாடு செய்யின், குறிஞ்சி மயங்கிவந்த திணைமயக்கம் என்று கொள்ளல் வேண்டும். இவ்வாறு இயற்கையோடு கலந்து மலர்ந்த வாழ்வியல் நெறிகளும், அந்நெறிகளால் வளர்ந்து வலிமைபெற்ற தமிழ் மொழியில் இனிமைகளும் கற்று உணர்ந்து நினைந்து நினைந்து இன்புறுதற்குரியன் ஏற்றுப் போற்றுதற்கும் உரியன. இவ் வொழுகலாறுகளின் செழுமைகளை எல்லாம் தேனெனத் திரட்டிச் சேர்த்து வழங்கும் செவ்வியுடையது கலித்தொகை யாகும். 'கற்றறிந்தார் ஏத்தும் கலித்தொகை என்னும் புகழுடைய இதனைக் கற்றும் அறிந்தும் நாமும் ஏத்திப் போற்றுவோமாக.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பாலைக்கலி.pdf/98&oldid=822096" இலிருந்து மீள்விக்கப்பட்டது